2023 Top 5 Movies: ஒரே ஆண்டில் தமிழ் சினிமாவில் 2000 கோடிக்கு மேல் வசூல்! தாறுமாறு வசூல் செய்த டாப் 5 படங்கள்!
இந்த வருடம் தமிழ் சினிமாவில், தாறுமாறாக வசூல் செய்த 5 முன்னணி நடிகர்களின் படங்கள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Ajith Acting Action Thriller Thunivu Box Office:
இந்த வருடத்தின் துவக்கத்திலேயே அஜித் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி இரு தரப்பு ரசிகர்களையும் உற்சாகமாகியது. மேலும் இந்த இரு படங்களுமே வசூலில் கெத்து காட்டியது. அந்த வகையில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹீரோவாக நடித்து வெளியான 'துணிவு' திரைப்படம் 330 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக கூறப்படுகிறது.
Thalapathy Vijay acting Varisu Box Office Collection:
பொங்கல் திருநாளை குறிவைத்து வெளியான மற்றொரு திரைப்படமான, தளபதியின் 'வாரிசு' ... மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானாலும், இப்படத்தில் அதிகம் தெலுங்கு வாடை வீசியதால் இப்படம், தமிழ் ரசிகர்களை ரீச் ஆகவில்லை. ஆனால் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள், மற்றும் யோகி பாபுவின் காமெடி, போன்றவை ரசிக்க வைத்தது. ராஷ்மிகா மற்றும் விஜய்யின் ரொமான்ஸ் காட்சிகள் புஸ் ஆனதால், பல ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த திடரைப்படம் 290 கோடி முதல் 310 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.
Bhumika Chawla: 45 வயதிலும் அதிகாலை ஆதவனை அழகால் மயக்கிய பூமிகா! சேலை அழகில் சுழட்டி போட்ட போட்டோஸ்!
Maniratnam Directing Ponniyin Selvan 2 Collection
இதை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வரலாற்று திரைப்படமான இப்படத்தின் முதல் பாகம், 500 கோடி வரை வசூல் செய்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கும் இதே எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இப்படம் 250 முதல் 300 கோடி வரை மட்டுமே வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
Rajinikanth starring Jailer movie collection
இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம், மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில், ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க, வசந்த் ரவி ரஜினியின் மகனாக நடித்திருந்தார். மேலும் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரீப் ஆகியோர் நடிக்க, வில்லனாக விநாயகன் மிரட்டினார். இப்படம், சுமார் 650 கோடிக்கு வசூல் சாதனை செய்ததாக படக்குழு அறிவித்தது.
Leo Movie Collection:
இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த படங்களில் உள்ள மற்றொரு திரைப்படம், சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' தான். ஆயுத பூஜையை குறிவைத்து வெளியான இப்படம், இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினி, கமல், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாததால், தற்போது வரை பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இதுவரை இப்படம் சுமார் 610 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D