எங்க வீட்டு லிட்டில் கிருஷ்ணா.... உயிர், உலகத்தோடு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய விக்கி - நயனின் கியூட் கிளிக்ஸ்
Nayanthara Krishna Jayanthi celebration : நடிகை நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் தங்களது மகன்களுடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
nayanthara
சமூக வலைதளம் பக்கமே தலைகாட்டாமல் இருந்த நடிகை நயன்தாரா, கடந்த வாரம் திடீரென இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அதுவும் முதல் வீடியோவிலேயே தனது மகன்களுடன் மாஸாக எண்ட்ரி கொடுத்து அசத்தி இருந்தார். நயன்தாரா இன்ஸ்டாகிராமில் நுழைந்ததும் அவரை பின் தொடர்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரு வாரத்திற்குள்ளாகவே 33 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை பெற்று சாதனை படைத்துள்ளார் நயன்.
Nayanthara kids
வழக்கமாக புரமோஷன் நிகழ்ச்சிகளை தவிர்த்து வரும் நயன்தாரா, தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளதால் அதன் வாயிலாக புரமோஷன் செய்ய தொடங்கி உள்ளார். அவர் நடித்துள்ள ஜவான் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. அந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன். அதுமட்டுமின்றி இப்படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகி இருக்கிறார் நயன்தாரா. அப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புரமோட் செய்து வருகிறார் நயன்தாரா.
இதையும் படியுங்கள்... Jawan Review in Tamil : கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கினாரா அட்லீ? ஷாருக்கானின் ஜவான் பட விமர்சனம் இதோ
Uyir and Ulag Krishna Jayanthi celebration
இப்படி இன்ஸ்டாகிராமில் இணைந்த ஒரே வாரத்தில் அதகளப்படுத்தி வரும் நயன்தாரா. தற்போது தனது மகன்களுடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவரது மகன்கள் உயிர் மற்றும் உலகம் இருவரும் கிருஷ்ணர் போல் வேடமணிந்துள்ளனர். இதைப்பார்த்த ரசிகர்கள் லிட்டில் கிருஷ்ணா அருமையாக உள்ளது என கமெண்ட் செய்து வருவதோடு அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளையும் அள்ளிக்குவித்து வருகின்றனர்.
Vignesh Shivan, Nayanthara
உயிர், உலகம் மற்றும் விக்கியை கொடுத்ததற்கு என்றென்றும் கடவுளுக்கு நன்றி என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் நயன்தாரா. இதற்கு ஹார்ட்டின் எமோஜிகளை பறக்கவிட்டு தன் அன்பை பொழிந்துள்ளார் விக்னேஷ் சிவன். விக்கி - நயன் ஜோடியின் இந்த ரொமாண்டிக் உரையாடல்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... விஜயகுமார் குடும்பத்தில் இருந்து இன்னொரு ஹீரோயினா! சினிமாவுக்கு ரெடியாகும் வனிதா மகள் ஜோவிகா!