பேசியே கதறவிட்ட அர்ச்சனா! ரூல்ஸ் பிரேக் பண்ணிட்டு எகிறி குதித்து பிக்பாஸ் பாஸ் வீட்டுக்கு வந்து அழுத விசித்ரா!
ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்ட, வயல் கார்டு போட்டியாளர்கள் தனக்கு மெண்டல் டார்ச்சர் கொடுப்பதாக, விசித்ரா ரூல்ஸ் பிரேக் பண்ணியுள்ள ஷாக்கிங் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம், பிக்பாஸ் வீட்டில் நிகழ்ச்சியில் இருந்து யூஹேந்திரன் மற்றும் வினுஷா ஆகிய இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், அர்ச்சனா, கானா பாலா, தினேஷ், பிராவோ, மற்றும் அன்னபாரதி ஆகிய 5 போட்டியாளர்கள் வயல் கார்டாக உள்ளே வந்தனர்.
திடீர் என 5 போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத பழைய ஹவுஸ் மேட்ஸ்.. அதிரடியாக புதிய போட்டியாளர்கள் 5 பேரையும் ஸ்மால் பாஸ் ஹவுஸுக்கு அனுப்பிய நிலையில், கூடவே கொசுறாக பிக்பாஸ் வீட்டில் இருந்த விசித்ராவையும் அனுப்பி வைத்தனர்.
புதிய போட்டியாளர்கள் வந்ததில் இருந்து... பழைய போட்டியாளர்கள் அவர்களை அதிகம் டார்கெட் செய்வது போல் தெரிகிறது. எனவே புதிய போட்டியாளர்கள் அனைவருமே இந்த வாரம் நாமினேஷனில் சிக்கி இருந்தாலும் அவர்கள் யாரும் இந்த வாரம் வெளியேற போவதில்லை என்று கூறி, பலர் அவர்களுக்கு வாக்குகள் போட்டு காப்பாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் இன்றைய முதல் புரோமோவில், சந்துல பொந்துல மாட்டிக்காத என்கிற ஒரு டாக்கை போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுப்பதை பார்க்க முடிந்தது. இதை தொடர்ந்து... அர்ச்சனா தன்னை இக்னோர் செய்துவிட்டதாக பேசுகிறார். பின்னர் விசித்ரா நான் போகட்டுமா என கேட்க வேண்டியது தான என ஏதோ அர்ச்சனாவிடம் ஆர்கியுமென்ட் செய்ய, அர்ச்சனா நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா? இல்ல நீங்க என்னை ட்விஸ்ட் பண்றீங்களா என கேட்கிறார். இதை தொடர்ந்து திடீர் என விசித்ரா ரூல்ஸை பிரேக் பண்ணும் விதத்தில், ஸ்மால் பாஸ் ஹவுசில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்கு எகிறி குதிப்பதை பார்க்க முடிந்தது.
இதை தொடர்ந்து வெளியான புரோமோவில், விசித்ரா ஆவேசமாக என்னை எதுக்குடி அங்க அனுப்புனீங்க என கேட்கிறார். இதற்க்கு ஜோவிகா ரூல்ஸ் பிரேக் பண்ணுனா கரெண்ட் கட் ஆகும் என கூறுகிறார். ஆகட்டும், வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவீங்க, அதுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்க என்ன என்ன கேனைனு நினைசீங்களா என கத்துகிறார். பின்னர் இங்க தான் இருப்பேன்... கேஸ் ஆப் பண்ணிட்டு உட்காருங்க எல்லோரும், யாருக்கும் சோறு கிடையாது என சொல்கிறார்.
பின்னர் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்ஸிடம், அங்க என்னை வச்சு செஞ்சிகிட்டு இருக்காங்க எல்லோரும். இதெல்லாம் எனக்கு செட் ஆகாது, அந்த அளவுக்கு ஒரு கருமாத்திரமான, மெச்சூரிட்டி இல்லாதவங்கள கொண்டு வந்து என் தலையில கட்டி இருக்காங்க என விசித்ராவே கண் கலங்கி அழுகிறார். எனவே இன்றைய எபிசோடில் என்ன நடக்கும் என்கிற எதிரிபார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D