Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வேட்டை மன்னன் முதல் கான் வரை... சிம்பு நடித்து டிராப் ஆன படங்கள் இத்தனையா? முழு லிஸ்ட் இதோ

வேட்டை மன்னன் முதல் கான் வரை... சிம்பு நடித்து டிராப் ஆன படங்கள் இத்தனையா? முழு லிஸ்ட் இதோ

கோலிவுட்டில் லிட்டில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் சிம்பு நடித்து கைவிடப்பட்ட தமிழ் படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Ganesh A | Published : Jan 31 2024, 10:37 AM
2 Min read
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
16
simbu Dropped Movies

simbu Dropped Movies

டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை வாய்ந்தவராக வலம் வருகிறார். சினிமாவில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், இவருக்கான ரசிகர் படை என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் சிம்பு, இதற்கு முன்னர் நடித்து கைவிடப்பட்ட படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

26
Asianet Image

கெட்டவன்

வல்லவன் படத்தின் வெற்றிக்கு பின்னர் சிம்பு இயக்கி நடித்த திரைப்படம் தான் கெட்டவன். இப்படத்தில் சிம்பு உடன் சந்தானம், லேகா வாஷிங்டன், பிரேம்ஜி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படம் முழுமையாக எடுக்கப்பட்டு சென்சாருக்கு அனுப்பப்பட்ட பின்னர் சென்சார் அதிகாரிகள் எக்கச்சக்கமான காட்சிகளை கத்திரி போட்டு தூக்கினர். இதனால் வேறுவழியின்றி இப்படத்தை கைவிட்டனர்.

36
Asianet Image

வாலிபன்

நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரிப்பில் சிம்பு இயக்கி நடிப்பதாக இருந்த திரைப்படம் வாலிபன். இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க இருந்தார். இப்படம் வெளிநாடுகளில் பட மாக்க திட்டமிட்டு இருந்ததால் இதன் பட்ஜெட் எகிறியது. இதனால் இப்படத்தை டிராப் பண்ணி விட்டனர்.

இதையும் படியுங்கள்... நடிகர் சிம்புவுக்கு இந்த நடிகை உடன் திருமணம்? ரீல் ஜோடியை ரியல் ஜோடியாக்குகிறாரா STR?

46
Asianet Image

வேட்டை மன்னன்

நெல்சன் இயக்கத்தில் சிம்பு நடித்த திரைப்படம் தான் வேட்டை மன்னன். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்கு பின்னர் சிம்பு நடிப்பில் ஆக்‌ஷன் திரைப்படமாக வேட்டை மன்னன் உருவானது. இதன் படப்பிடிப்பு 50 சதவீதம் வரை நிறைவடைந்த நிலையில், பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கியதால் இப்படத்தை டிராப் செய்துவிட்டனர்.

56
Asianet Image

ஏ/சி

நியூ படத்தின் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் சிம்பு நடிக்க கமிட் ஆன திரைப்படம் தான் ஏ/சி. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அசின் நடிக்க இருந்தார். இருவரை வைத்து போட்டோஷூட்டெல்லாம் நடத்தினர். ஆனால் ஷூட்டிங் தொடங்கும் முன்னரே இப்படத்தை கைவிட்டுவிட்டனர்.

66
Asianet Image

கான்

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் தான் கான். இப்படத்தை திரில்லர் கதையம்சத்தில் உருவாக்க திட்டமிட்டு இருந்தார் செல்வராகவன். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரெல்லாம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படக்குழு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் இப்படத்தை டிராப் செய்துவிட்டனர்.

இதையும் படியுங்கள்... பெரியப்பா ஆனார் சிம்பு! டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசனுக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா

Ganesh A
About the Author
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். Read More...
சிலம்பரசன்
சிலம்பரசன்
 
Recommended Stories
Top Stories