கண்ணழகி சார் அவங்க.. பிரபல நடிகை சிவரஞ்சனியை நியாபகம் இருக்கா? வாரிசு பட நடிகரின் மனைவி தான் இவங்க!
Actress Sivaranjani : குறைந்த காலமே சினிமா துறையில் பயணித்தாலும், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று விடுகின்றனர் சில நடிகர், நடிகைகள். அந்த வகையில் 90களின் துவக்கம் முதல் இறுதி வரை புகழின் உச்சத்தில் இருந்த நடிகை தான் சிவரஞ்சனி, இவருடைய உண்மையான பெயர் உமா மகேஸ்வரி.
Actress Sivaranjani
நிச்சயம் இக்கால இளைஞர்களுக்கு இவரைப் பற்றி தெரிந்திருக்க பெரிய அளவில் வாய்ப்பு இல்லை, ஆனால் 90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் பரிட்சயம் தான். கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான ஒரு கன்னட திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு அதே ஆண்டு ஆண்டு தமிழில் வெளியான "மிஸ்டர். கார்த்திக்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் களமிறங்கினார்.
Chinna Maple
கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற சிவரஞ்சனி, தமிழில் இறுதியாக கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான "துர்க்கை அம்மன்" என்கின்ற திரைப்படத்தில் நடித்ததோடு தனது திரையுலக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பிறகு இன்றளவும் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
Sivaranjani Family
அவர் திரைத்துறையில் இருந்து விலகிய அதே ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் மீகா ஸ்ரீகாந்த் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தாயைப் போலவே அனைவருக்கும் அந்த அழகிய கண்கள் கிடைத்திருக்கிறது என்றே கூறலாம். ஸ்ரீகாந்த் அவர்கள் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
அண்மையில் வெளியான தளபதி விஜய் அவர்களுடைய வாரிசு திரைப்படத்தில் அவருடைய இரு அன்னனங்களில் ஒருவராக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் அவர். இப்போது நடிகை சிவரஞ்சனி தனது அழகிய குடும்பத்தோடு தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.