வயசு 68 ஆனா என்ன.. அழகு குறையவேயில்லை - சொகு காரில் வந்திறங்கிய மூத்த நடிகை ரேகா - காரின் விலை என்ன தெரியுமா?
பாலிவுட் சினிமா உலகில் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வந்த ஒரு நடிகை தான் ரேகா. இவர் பழம்பெரும் தமிழ் நடிகர் காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Rekha
கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் ஹிந்தி திரை உலகில் உச்ச நட்சத்திரமாக இவர் திகழ்ந்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு வரை சுமார் 48 ஆண்டுகள் இவர் பாலிவுட் உலகில் முன்னணி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய 'சந்திரமுகி 2' படக்குழு! பி.வாசு கொடுத்த இன்ப அதிர்ச்சி!
Actress Rekha
அதே போல நடிகை ரேகா முன்னாள் ராஜ்யசபா மெம்பெர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ சுமார் 233 கோடி சொத்து இவரிடம் தற்பொழுது இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரு,ம் நிலையில் அவர் ஒரு புதிய ஆடம்பர சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளாராம். பொதுவாக இளம் நடிகைகள், மற்றும் நடிகைகள் தான் கோடிக்கணக்கில் செலவு செய்து சொகு கார்கள் வாங்குவதை நாம் பார்த்திருப்போம்.
BMW i7
ஆனால் 68 வயதிலும் அழகு குறையாத ரேகா, இளம் நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு இணையாக கார்கள் வாங்குவதிலும் அதிகம் ஆர்வம்கொண்டவர் என்று கூறப்படுகிறது. அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர், ஒரு பிராண்ட் நியூ எலக்ட்ரிக் வாகனத்தில் வந்து இறங்கி உள்ளார். அந்த கார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஐ7 ரக கார். இன்றைய தேதியில் சுமார் 2.3 கோடிக்கு அந்த கார் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.