MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • "தில் இருந்தா அவர் முன்னாடி பேசு".. கேப்டனை கலாய்த்த வடிவேலு - செட்டில் வைத்து வறுத்தெடுத்த பிரபல நடிகர்!

"தில் இருந்தா அவர் முன்னாடி பேசு".. கேப்டனை கலாய்த்த வடிவேலு - செட்டில் வைத்து வறுத்தெடுத்த பிரபல நடிகர்!

Actor Vadivelu : பிரபல நடிகரும் அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு செய்தி நாட்டையே உலுக்கியுள்ளது. ஒட்டுமொத்த திரையுலகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது என்றால் அது மிகையல்ல.

2 Min read
Ansgar R
Published : Dec 31 2023, 08:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
RIP Captain Vijayakanth

RIP Captain Vijayakanth

நடிகர் விஜயகாந்த் அவருடைய மரணம் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர் பற்றிய பல நினைவுகள் தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக தங்கள் சினிமா வாழ்க்கையில் எந்த அளவிற்கு விஜயகாந்த் அவர்கள் தங்களுக்கு உதவினார் என்று பல நடிகர், நடிகைகளும் தங்களுடைய கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

ஒரே வருடத்தில் 2500 கோடி வசூல்.. நான் தான் எப்போவுமே கிங் - நிரூபித்து காட்டிய மரண மாஸ் நடிகர் - யாருப்பா அது?

23
Vadivelu and Vijayakanth

Vadivelu and Vijayakanth

அதே நேரத்தில் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கிவரும் வைகைப்புயல் வடிவேல் அவர்கள் தன்னை வளர்த்து விட்ட விஜயகாந்த் அவர்களுடைய மறைவுக்கு நேரில் வராதது மட்டுமல்லாமல், இதுவரை ஒரு இரங்கல் செய்தி கூட தெரிவிக்காதது ஏன் என்கின்ற கேள்வியை முன் வைத்து வருகின்றனர் பலர். 

வடிவேலு அவர்கள் ஒரு நடிகனாக மாபெரும் வெற்றியை பெற்றிருந்தாலும், ஒரு சராசரி மனிதனாக அவர் தோல்வியை கண்டுள்ளதாகவே கூறுகின்றனர் மக்கள். இந்நிலையில் அவருக்கும் நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கும் இடையே இருந்த பிரச்சினைகள் குறித்து பல தகவல்கள் இணையத்தில் உலவி வரும் இந்த நேரத்தில் நடிகர் பொன்னம்பலம் வெளியிட்ட சில தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரபல திரைப்பட விமர்சகரும், இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன்.

33
ponnambalam

ponnambalam

அவர் வெளியிட்ட தகவலின்படி பொன்னம்பலம் ஒரு பேட்டியில் பேசிய பொழுது "சுந்தர் சி அவர்களுடைய நகரம் என்கின்ற படத்தில் அவரோடு நான் நடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது சுந்தர் சி எனக்கு கொடுத்த டயலாக் பேப்பரில் இல்லாத ஒரு வசனத்தை நான் பேசினேன். அதை கேட்ட வடிவேலு உடனே கேப்டன் விஜயகாந்த் அவர்களை மேற்கோள்காட்டி அவரை கிண்டல் செய்ய தொடங்கினார். எனக்கு சட்டென்று கோபம் வந்தது, "வடிவேலு அவரைப் பற்றி தப்பா பேசாத, உனக்கு அவரை பிடிக்கவில்லை என்பதற்காக என்னை வைத்து அவரை திட்டாதே, நீ ஆம்பளையாக இருந்தால் அவர் வீட்டு வாசலுக்கு போய் அவரை திட்டு" என்று கூறினேன். 

எனக்கு வாழ்வளித்த கேப்டனை என் முன்னாலே திட்டினாள் என்னால் எப்படி அமைதியாக இருக்க முடியும் என்று அந்த பேட்டியில் பொன்னம்பலம் அவர்கள் பேசியுள்ளதாக கூறியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
வடிவேலு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved