Mass Hit Actor of 2023 : இந்த 2023ம் ஆண்டு இனிதே இன்றோடு முடிகிறது, பல நல்ல திரைப்படங்கள் இந்த 2023ம் ஆண்டில் வெளியாகியுள்ளது. பல சிறந்த இயக்குனர்கள் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த 2023 ஆம் ஆண்டு இன்றோடு முடிய உள்ள நிலையில் இவ்வாண்டு அதிக வசூலை தங்கள் திரைப்படம் மூலம் குவித்த நாயகர்களின் பட்டியல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இது இந்திய அளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் முடிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமா உலகில் இவ்வாண்டு பல முன்னணி நடிகர்களுடைய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

குறிப்பாக தமிழ் மொழியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் துவங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் மற்றும் தளபதி விஜய் அவர்களுடைய லியோ ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்த திரைப்படங்களாக மாறி உள்ளது. அதிலும் சிறப்பாக ஜெயிலர் மற்றும் லியோ ஆகிய இரு திரைப்படங்களும் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து இந்த 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. 

ஒரே ஒரு வேலை.. போட்டியிடும் 5 பேர்.. முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் - OTTயில் முதல் முறையாக களமிறங்கும் சேரன்!

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள தகவலின்படி சுமார் 2500 கோடி ரூபாயை ஒரே வருடத்தில் தனது திரைப்படங்களின் மூலம் வசூல் செய்து இந்த 2023 ஆம் ஆண்டின் வெற்றி நாயகனாக மாறி இருக்கிறார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இந்த ஆண்டு அவர் நடிப்பில் "பத்தான்", அட்லீயின் "ஜவான்" மற்றும் "Dunki" ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

"டைகர் 3" என்ற சல்மான் கான் திரைப்படத்தில் ஒருவர் சிறு கேமியோ கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார். அந்த ஒரு படத்தை தவிர்த்து மற்ற மூன்று திரைப்படங்களை ஓன்று சேர்த்து பார்க்கும் பொழுது அவர் சுமார் 2500 கோடி ரூபாய்க்கு மேல் அந்த மூன்று படங்களின் மூலம் வசூல் செய்துள்ளார். இதுவர் அவரை இவ்வண்டி வெற்றி நாயகனாக மாற்றியுள்ளது. 

Scroll to load tweet…

தளபதி விஜய் அவர்களை பொறுத்தவரையில் இவ்வாண்டு வெளியான வாரிசு திரைப்படம் பெரிய அளவில் வசூல் சாதனை செய்யாத நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான "லியோ" திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இவ்வாண்டு ஜெயிலர் திரைப்படம் மட்டுமே வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.