ஒரே ஒரு வேலை.. போட்டியிடும் 5 பேர்.. முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் - OTTயில் முதல் முறையாக களமிறங்கும் சேரன்!

Cherans Journey : பிரபல இயக்குனர் சேரன் இயக்கத்தில் முதல் முறையாக உருவாகியுள்ள வெப் தொடர் ஒன்று விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகர் சரத்குமார் மற்றும் பிரசன்ன உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

Cherans Journey new wed Series Directed by Cheran Releasing soon in OTT Platform ans

இக்கால இளைஞர்கள் சிலருக்கு இயக்குனர் சேரனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு போட்டியாளராக தான் தெரியும். ஆனால் இயக்குனர் சேரன் நான்கு முறை தேசிய விருது வென்ற ஒரு மிகப்பெரிய இயக்குனர் என்பது பலர் அறியாத உண்மை. பிரபல இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் அவர்களுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் தான் சேரன். 

கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் அவர்களின் "புரியாத புதிர்", அதனை தொடர்ந்து வெளியான "சேரன் பாண்டியன்" மற்றும் "சூரியன் சந்திரன்" உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகராகவும், கே.எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்த சேரன் அவர்கள் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான "பாரதி கண்ணம்மா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் எழுத்தாளராகவும், இயக்குனராகவும் தமிழ் திரையுலகில் களம் இறங்கினார். 

நடிகர் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு.. 2 பெண்கள் உட்பட 6 பேர் காயம்..

அதன் பிறகு அவருடைய இயக்கத்தில் வெளியான "பொற்காலம்", "வெற்றி கொடி கட்டு", "பாண்டவர் பூமி", "ஆட்டோகிராப்" மற்றும் தவமாய் தவமிருந்து போன்ற பல திரைப்படங்கள் கிளாஸ் ஹிட்டான திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2004 ஆம் ஆண்டு தனது இயக்கத்தில் வெளியான "ஆட்டோகிராப்" என்கின்ற திரைப்படத்தில் வந்த "நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்" என்கின்ற பாடலை எழுதியதும் இயக்குனர் சேரன் தான். 

இவ்வாண்டு வெளியான தமிழ் குடிமகன் என்கின்ற திரைப்படத்தில் அவர் இறுதியாக நடித்திருந்தார், ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான "திருமணம்" என்கின்ற திரைப்படம் தான் அவர் இயக்கி வெளியிட்ட கடைசி திரைப்படமாக இருந்தது. இந்நிலையில் நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் வெப் சீரிஸ் ஒன்றின் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார் சேரன்.

Cherans Journey என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இணைய தொடர் நேரடியாக சோனி லைவ் OTT தளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. ஜனவரி 12ஆம் தேதி முதல் சோனி லைவ் தளத்தில் ஒளிபரப்பாகும் இந்த வெப் சீரிஸ் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தோடு அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் சரத்குமார், பிரசன்னா உள்ளிட்ட பலர் இந்த இணைய தொடரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios