MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஹீரோவாக அறிமுகமாகும் மகன் விஜய்ஸ்ரீ ஹரி.! கண்ணீருடன் ரஜினிக்கு நன்றி கூறி வனிதா விஜயகுமார் போட்ட பதிவு!

ஹீரோவாக அறிமுகமாகும் மகன் விஜய்ஸ்ரீ ஹரி.! கண்ணீருடன் ரஜினிக்கு நன்றி கூறி வனிதா விஜயகுமார் போட்ட பதிவு!

வனிதா விஜயகுமார் மற்றும் அவரின் முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த மகன் விஜய்ஹரி பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், இதனை வெளியிட்டு கண்ணீருடன் கூடிய பதிவு ஒன்றையும் போட்டுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Jul 25 2024, 08:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Vijayakumar and Manjula daughter Vanitha

Vijayakumar and Manjula daughter Vanitha

பழம்பெரும் நட்சத்திர ஜோடியான விஜயகுமார் -  மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள், வனிதா விஜயகுமார் தன்னுடைய 18 வயதிலேயே தன்னுடன் மேடை நாடகம் ஒன்றில் பணியாற்றிய நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆகாஷ் மூலம் வனிதா விஜய் ஸ்ரீஹரி என்கிற மகன் மற்றும் ஜோவிகா என்கிற இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்தார். ஜோவிகா பிறந்த ஒரே வருடத்தில் ஆகாஷ் - வனிதா இடையே ஏற்பட்ட மோதல், விவாகரத்தில் முடிந்தது.
 

28
Vanitha Vijayakumar Son Vijaysri Hari:

Vanitha Vijayakumar Son Vijaysri Hari:

ஆகாஷை விவாகரத்து செய்த அதே ஆண்டு ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார் வனிதா. அவர் மூலம் வனிதாவுக்கு ஜெயனித்தா என்கிற மகள் உள்ளார். வனிதாவின் மூத்த மகன் விஜய்ஸ்ரீ ஹரி அம்மாவுடன் இருக்க விருப்பம் இல்லை என கூறியதை தொடர்ந்து, ஆகாஷிடம் தான் வளர்ந்து வருகிறார். வனிதா விஜயகுமார் அவரின் மகனை நினைத்து உருகினாலும், விஜய்ஸ்ரீ ஹரி... அதனை கண்டுகொள்வதே இல்லை.

தல எஃபெக்ட்: பைக் ரேஸில் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி மகன் சூர்யா!
 

38
Vanitha Dauther Jovika and Jayanitha

Vanitha Dauther Jovika and Jayanitha

அதே போல் வனிதாவின் மகள் ஜோவிகா, முழுக்க முழுக்க தன்னுடைய அம்மா வனிதாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளார். இவருக்கு அப்பா மீது பாசம் இருந்தாலும், ஏனோ ஆகாஷ் ஜோவிகாவை கண்டுகொள்வது இல்லை. வனிதாவின் மூன்றாவது மகள் ஜெயனித்தா... அவரின் தந்தை ஆனந்தத்துடன் தான் உள்ளார்.
 

48
Vijaysri Hari Debut Hero:

Vijaysri Hari Debut Hero:

வனிதா தன்னுடைய மகள் ஜோவிகாவை திரையுலகில் அறிமுகப்படுத்த ஆயத்தமாக உள்ள நிலையில், தங்கைக்கு முன்னர் அண்ணன் விஜய் ஸ்ரீஹரி தற்போது ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. கும்கி படத்தில் யானையை வைத்து இயக்கிய, இயக்குனர் பிரபு சாலமன் தான் இந்த படத்தில் ரியல் சிங்கத்தை நடிக்க வைத்து இயக்கி உள்ளார். சிங்கத்தை வைத்து இயக்கிய இப்படம் முழுக்க முழுக்க தாய்லாந்தில் தான் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

சூர்யா - கார்த்தி கலந்து கொண்டு சிறப்பித்த அகரம் அறக்கட்டளையின் 45-ஆம் ஆண்டு கல்வி விழா புகைப்படங்கள்!
 

58
Mambo Movie First look

Mambo Movie First look

இந்த படத்தில் விஜய் ஸ்ரீஹரிக்கு ஜோடியாக பிரபு சாலமன் மகள் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை. மேலும் இப்படத்தில், யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பரபரப்பாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது.
 

68
Vanitha Vijayakumar Tweet:

Vanitha Vijayakumar Tweet:

இந்த படத்திற்கு மாம்போ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், விஜய்ஸ்ரீ ஹரி சிங்க குட்டி ஒன்றுடன் விளையாடு கொண்டிருக்கும் புகைப்படம் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்து கண் கலங்கிய படி தன்னுடைய தாய் பாசத்தை வெளிப்படுத்தி நடிகை வனிதா விஜயகுமார் எமோஷ்னல் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

ஜாபர் சாதிக் மனைவி வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடி பரிவர்த்தனை? இயக்குனர் அமீர் அறிக்கை வெளியிட்டு ஆதங்கம்!

78
Vanitha vijayakumar Tearful Post:

Vanitha vijayakumar Tearful Post:

இந்தபதிவில், "என் முதல் குழந்தையான விஜய் ஸ்ரீஹரிக்கு வாழ்த்துக்கள். அழகியலை படம் பிடிக்கும் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நீ அறிமுகம் ஆகிறாய். அதே போல் உன்னை வழி நடத்திய ரஜினிகாந்த் அங்கிளுக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த பதிவை நான் டைப் செய்யும் போதே என் கண்கள் கலங்குகிறது. எப்போதும் என் அன்பும், பிரார்த்தனைகளும் உனக்கு இருக்கும்.

88
Mambo First look Released:

Mambo First look Released:

என் மகன் ஹீரோவாகி விட்டார்.  எனது பத்திரிக்கை மற்றும் ஊடக குடும்பம் மற்றும் எனது தம்பிகள் மற்றும் தங்கைகளே, நீங்கள் எனக்கு தொடர்ந்து அளித்து வரும் அனைத்து ஆசீர்வாதங்களையும் அன்பையும் அவருக்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உன்னை கடவுள் எப்போதும் ஆசீர்வதிப்பார் என தெரிவித்துள்ளார். 

குட்டி தேவதை கிளின் காராவுடன்... லண்டனில் உள்ள ஹைட் பார்கில் சிரஞ்சீவி குடும்பம்! வைரலாகும் புகைப்படம்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அருண் விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved