- Home
- Gallery
- சூர்யா - கார்த்தி கலந்து கொண்டு சிறப்பித்த அகரம் அறக்கட்டளையின் 45-ஆம் ஆண்டு கல்வி விழா புகைப்படங்கள்!
சூர்யா - கார்த்தி கலந்து கொண்டு சிறப்பித்த அகரம் அறக்கட்டளையின் 45-ஆம் ஆண்டு கல்வி விழா புகைப்படங்கள்!
நடிகர் சூர்யா, படிக்க ஆர்வம் காட்டும் மாணவர்களுக்காக நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையின் 45-ஆவது ஆண்டின் கல்வி விழா நேற்று நடைபெற்ற நிலையில், இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

Agaram Foundation 45th Ceremony:
நடிகர் சூர்யா இன்று ஏராளமான மாணவர்களுக்கு கல்வி வழங்கி வரும் அகரம் அறக்கட்டளை, கடந்த 1979 ஆம் ஆண்டு... அவரின் தந்தை சிவகுமாரால் அவரது 100வது படத்தின் போது, ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளை என்கிற பெயரில் தொடங்கப்பட்டது.
Sivakumar started this foundation:
இந்த அறக்கட்டளை மூலம், ஒவ்வொரு வருடமும் சிவகுமார் பல மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வந்தார். 30 வருடங்கள் சிவகுமாரின் பொறுப்பில் இந்த அறக்கட்டளையை... சூர்யா தான் துவங்கிய அகரம் பவுண்டேஷன் நிறுவனத்துடன் இணைத்து, தந்தையின் தலைமையின் கீழ் தொடர்ந்து கல்விப் பணிகளை செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
Suriya Participate this ceremony:
இந்நிலையில் அகரம் அறக்கட்டளை 45 ஆம் ஆண்டு கல்வி விழாவை கொண்டாடியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த விழாவில், நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு, பெற்றோரை இழந்த, மற்றும் ஏழ்மை காரணமாக படிப்பை தொடர முடியாமல் இருக்கும், 12ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேரின் மேல்படிப்பிற்கான கல்வி உதவி தொகையை வழங்கினர்.
Suriya Positive Speech:
இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா, அகரம் அறக்கட்டளையின் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் சுமார் 6 ஆயிரம் மாணவர்களின் வாழ்க்கையை மாறியுள்ளதாக பெருமிதத்தோடு தெரிவித்தார். மேலும், இப்போது இருக்கும் பிரச்னையை பெரிதாக நினைக்காமல்... நேர்மறையான சிந்தனையுடன் எப்போதும் மாணவர்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
Students Selfie:
மேலும் இந்த நிகழ்ச்சியில் மணிப்பூர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருடனும் சூர்யா, கார்த்திக், மற்றும் சிவகுமார் போட்டோ எடுத்து கொண்டனர். மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சிறப்பாக வரவேற்று உணவு உள்ளிட்ட உபசரிப்புகளும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.