சூப்பர்ஸ்டாருக்கே விபூதியா! சூதாட்டத்தில் தோற்று ரூ.150 கோடியை இழந்தாரா ரஜினிகாந்த்? பிரபலம் சொன்ன பகீர் தகவல்
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், சூதாட்டத்தில் ரூ.150 கோடியை இழந்துள்ளதாக பிரபலம் ஒருவர் பகீர் தகவலை கூறி இருக்கிறார்.
Rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, அவருக்கு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை கலாநிதி மாறன் பரிசாக வழங்கினார். அந்த காரில் சென்ற போது தான் தனக்கு பணக்காரன் ஆன ஃபீல் வந்ததாக ரஜினி சக்சஸ் மீட்டில் கூட கூறி இருந்தார். ரஜினியின் இந்த பேச்சுக்கு பின்னால் இருக்கும் விஷயங்களை பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்திய பேட்டியில் பேசி உள்ளது வைரலாகி வருகிறது.
Rajinikanth, Bismi
அந்த பேட்டியில் பிஸ்மி கூறியதாவது : “ரஜினி ஒரு மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக இருந்த நிலையிலும் அவர் அம்பேசிடர் காரை தான் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்தார். அவருக்கு பின்னர் வந்த நடிகர்கள் எல்லாம் சொகுசு கார்களை பயன்படுத்தினாலும், ரஜினி அம்பாசிடர் காரில் தான் ஷூட்டிங்கிற்கு வருவார். அவர் நினைத்திருந்தால் எவ்வளவு விலை உயர்ந்த சொகுசு கார்களையெல்லாம் வாங்கி இருக்க முடியும், ஆனால் எளிமையை கடைபிடித்ததன் காரணமாக அவர் அதை செய்யவில்லை.
இதையும் படியுங்கள்... லியோ படம் பார்த்துவிட்டு, விஜய் கொடுத்த அந்த ரியாக்ஷன்.. ரசிகர்களுக்கு செம ட்ரீட் வெயிட்டிங்!
Rajinikanth in jailer success meet
அதன்பின்னர் இன்னோவா காருக்கு மாறினார் ரஜினி. கிட்டத்தட்ட கலாநிதி மாறன் கார் கொடுப்பதற்கு முன்பு வரை அவர் அந்த காரில் தான் பயணித்து வந்தார். இந்தமாதிரியான கார்களில் பயணம் பண்ணிய ரஜினிக்கு, திடீரென ஒரு லக்ஸூரியான காரில் பயணிக்கும் போது அடடா இது பணக்காரங்க ஓட்டுகிற கார் என்கிற ஃபீல் வந்து தான் அவர் ஜெயிலர் சக்சஸ் மீட்டில் தான் பணக்காரன் போல் உணர்வதாக கூறி இருக்கலாம்.
Super Star Rajinikanth
ரஜினி எவ்வளவு பெரிய செல்வந்தர், அவரிடம் உள்ள கோடிகளை எண்ண இரண்டு கை பத்தாது. அத்தனை கோடிகளை அடுக்கி வைத்திருந்தாலும், அவர் மனதளவில் மிகவும் எளிமையானவராக தான் இருக்கிறார். அதேபோல் ரஜினி தான் இப்போ தான் பணக்காரனாக உணர்வதாக கூறியதை ஒரு மிகைப்படுத்திய பேச்சாகவும் பார்க்க முடிகிறது. ஏனெனில் ரஜினி ஒரு சாதாரண வாழ்க்கையை வாழவில்லை. பல ஆண்டுகளாக கோடீஸ்வரனாகவே உள்ளார்.
Kalanithi maran gifted a car to rajinikanth
திடீர்னு 100 கோடி, 150 கோடி சம்பளம் வாங்கிட்டு, அந்த பணத்தையெல்லாம் எப்படிடா செலவழிப்பது என தெரியாமல், லாஸ் வேகாஸ் கிளம்பிபோய் அங்கு சூதாடி, இந்த சம்பாதித்த பணத்தையெல்லாம் தோத்துட்டு அப்பாடா என மனசு ரிலாக்ஸ் ஆகி வருகிற வாழ்க்கையை தான் ரஜினி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று பார்க்கும் போது காருக்குள்ள உட்காரும் போது தான் பணக்காரனா ஃபீல் பண்ணதா அர்த்தம் இல்லை. நீங்க லாஸ் வேகாஸில் சூதாடும் போதே அது தெரிஞ்சு போச்சு” என பிஸ்மி கூறி உள்ளது வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... கலையுலகம் கண்டுகொள்ளாத ஏக்கம்.. நானும் தற்கொலை பற்றி யோசித்திருக்கிறேன் - மாணவர்களுடன் உரையாடிய கமல்ஹாசன்!