கார்ல கடத்தி என்ன மூணு பேரும் நாச செஞ்சுட்டாங்க.. தாயிடம் கதறிய மகள்.. இறுதியில் நடந்தது என்ன?
ஓடும் காரில் வைத்து 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் 16 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி வீட்டிற்கு பின் பகுதியில் இருக்கும் மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் நைசாக பேசி வெளியே அழைத்து சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த மேலும் 2 பேர் அங்கு வந்தனர். பின்னர் 3 பேரும் அந்த சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி காரில் கடத்தி சென்றனர். ஓடும் காரில் 3 பேரும் மாறி மாறி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தனர். இதையடுத்து மயக்கமடைந்த சிறுமியை மாட்டுத் தொழுவத்துக்கு வெளியில் வீசி விட்டு சென்று விட்டனர். மயக்கம் தெளிந்து எழுந்த அந்த சிறுமி வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர், தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். கூட்டுபாலியல் பலாத்காரம் சம்பவம் தொடர்பாக 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.