வெளிநாட்டில் பக்காவா ஒரு வீடு.. இனி ஷூட்டிங் போக கவலை இல்ல.. அசத்தும் தல அஜித் - வீடு எங்க இருக்கு தெரியுமா?
பைக் ரய்டு ஒரு பக்கம் சினிமா ஒரு பக்கம் என்று தனது வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ்ந்து வரும் ஒரு நல்ல மனிதனும், நடிகரும் தான் தல அஜித் குமார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார் இவர்.
Thala Ajith and Vignesh Shivan
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை முதலில் இயக்க ஒப்பந்தமானது பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட சில சிக்கல்களால் இந்த திரைப்படத்தை, இயக்குனரும், நடிகருமான மகிழ் திருமேனி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகும் இந்த திரைப்படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் பெரிய அளவில் சிக்கல்களை சந்தித்து வந்தது.
இரண்டு மாடி.. அதிரடியாக களமிறக்கப்படும் பொம்பள பிக்பாஸ்? இது நம்ப லிஸ்டுலையே இல்ல பாஸ்!
Thala Ajith and Magizh Thirumeni
இந்நிலையில் பல மாதங்கள் கழித்து தற்போது இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் லியோ திரைப்படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தயாரிப்பு நிறுவனமான லைகா இந்த படத்தை விட்டு வெளியேறுகிறது என்று வெளியான தகவலும் போலி என்றும், இது தங்களுக்கு பெருமை அளிக்கும் ஒரு சிறந்த படம் என்றும் அந்நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Thala Ajith House
இந்த சூழலில் தல அஜித் அவர்களுடைய புதிய வீடு ஒன்று குறித்து தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. வெளியான தகவல்களின் அடிப்படையில் துபாய் நாட்டில் நடிகர் அஜித் அவர்கள் ஒரு சொகுசு பங்களாவை வாங்கி உள்ளதாகவும், பல கோடி மதிப்புள்ள இந்த பங்களாவில் அவர் துபாய் செல்லும் பொழுது தங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பணிகள் துபாயில் நடக்கும் பொழுது தனது வீட்டில் இருந்து படப்பிடிப்புக்கு அவர் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.