Asianet News TamilAsianet News Tamil

கொடைக்கானலில் இ - பாஸ் முறையை ரத்து செய்யவில்லை என்றால் உணவகம், விடுதிகள் முழுவதுமாக மூடப்படும் என எச்ரிக்கை

கொடைக்கானலில் இ - பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் உணவகங்கள், விடுதிகள் மொத்தமாக மூடப்படும் என விடுதி உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

if e pass system will followed at kodaikanal then we will close all hotels and lodges said lodge owners vel
Author
First Published May 4, 2024, 7:43 PM IST

சென்னை உயர் நீதி மன்றம் வரும் 7ம் தேதி முதல் கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து கொடைக்கானல் மலைப்பகுதியில் வசிக்கும் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஹோட்டல் அண்ட் ரிசார்ட் உரிமையாளர் சார்பில் தனியார் விடுதியில் நடைபெற்றது. 

சவுக்கு சங்கரை செருப்பால் அடிக்க பாய்ந்த பெண்கள்; கோவை நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு

இந்த ஆலோசனையில் முக்கியமாக குறைவான அளவில் இ பாஸ் கொடுத்தால் ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி வைத்திருக்கும் தாங்கள் அனைவரும் பெரிதும் பாதிப்பு அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. சீசன் வருமானத்தில் தான் தாங்கள் வாங்கிய கல்விக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட பிற அனைத்து கடன்களையும் அடைக்க  முடியும். எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட்டு இந்த வழக்கை மேல் முறையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

ஜெயக்குமாரின் மர்ம மரணத்தில் எனக்கு தொடர்பா? MLA ரூபி மனோகரன் பரபரப்பு விளக்கம்

மேலும் கார்பார்க்கிங் வசதி, போக்குவரத்து காவலர்களை சீசனில் அதிகப்படுத்தி போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட அமைச்சர்கள் முன்வர வேண்டும். கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரம் கருதி நீதியரசர்கள் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர், இது தொடர்பாக வருகின்ற திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து இ பாஸ் முறையை ரத்து செய்ய மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். 

தொடர்ந்து இதில் சுமூக உடன்பாடு கிடைக்கவில்லை எனில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மாட்டோம். அதே போல உணவும் வழங்க மாட்டோம் எனவும் எச்சரித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios