Asianet News TamilAsianet News Tamil

Jayakumar Death: ஜெயக்குமாரின் மர்ம மரணத்தில் எனக்கு தொடர்பா? MLA ரூபி மனோகரன் பரபரப்பு விளக்கம்

மறைந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயகுமாருக்கும் தனக்கும் எந்த ஒரு குடுக்கல் வாங்கலும் இல்லை, அவரது மரணம் எனக்கு பேரிழப்பு என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.

congress mla ruby manoharan explain about allegation against jayakumar death issue in tirunelveli vel
Author
First Published May 4, 2024, 5:25 PM IST

காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 நாட்களாக காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், ஜெயக்குமாரின் உடல் அவரது வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள தோட்டத்தில் தீயில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே உயிரிழந்த ஜெயக்குமார் தனசிங் எழுதியதாக கடிதம் ஒன்று வெளியாகி கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த கடிதத்தில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் சிலரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கடிதம் காவல் துறையிடம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முதல் மாத சம்பளத்தில் பெற்றோருக்கு விசத்தை வாங்கி கொடுத்த மகன், முதியவரை தொடர்ந்து தாயும் உயிரிழப்பு

இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மறைந்த காங்கிரஸ்  மாவட்டத் தலைவர் ஜெயகுமாருக்கும், தனக்கும் மிக நெருங்கிய நட்பு உள்ளது. பல்வேறு தேர்தல்களில் தாங்கள் ஒன்றாக பணியாற்றி உள்ளோம். ஒன்றரை மாதத்திற்கு முன்பு கூட பாராளுமன்ற தேர்தலில் ஒன்றாக பயணம் செய்தோம். 

பால்வாடி செல்லும் பச்சிளம் குழந்தையையும் விட்டு வைக்காத காம கொடூரன்; வத்தலகுண்டுவில் பரபரப்பு

ஜெயக்குமாரின் இறப்பு எனக்கும், கட்சிக்கும் மிகப்பெரிய இழப்பு. தன்மேல் வேண்டும் என்றே ஒரு சிலர் பழி போடுகின்றனர். உண்மையை காவல்துறை கண்டு பிடிப்பார்கள். காவல்துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறேன். தனக்கும், அவருக்கும் எந்த ஒரு கொடுக்கல், வாங்கலும் இருந்தது கிடையாது. மேலும் அண்ணன், தம்பியாக தான் நாங்கள் பழகினோம். கடைசி வரை நண்பர்களாக இருந்தோம். உண்மை காவல்துறை விசாரணையில் தெரிய வரும் என தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios