முதல் மாத சம்பளத்தில் பெற்றோருக்கு விசத்தை வாங்கி கொடுத்த மகன், முதியவரை தொடர்ந்து தாயும் உயிரிழப்பு
நாமக்கல்லில் தனது மகன் வாங்கிக் கொடுத்த விசம் கலந்த உணவை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிரிழப்பு.
நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ், இவரது மகன் பகவதி (20), புதுச்சத்திரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் இ-சேவை மையத்தில் பகுதி நேரம் வேலை செய்துள்ளார்.
வேலைக்கு சேர்ந்து முதல் மாதம் சம்பளத்தை பெற்ற பகவதி, கடந்த 30ம் தேதி நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் உணவகத்தில், 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கி கொண்டு, வீட்டில் உள்ள தனது தாயார் நதியா (40), இதனைத்தொடர்ந்து தேவராயபுரத்தில் வசித்து வரும் தாத்தா சண்முகநாதன் (67) வீட்டிற்கு சென்று அங்கு தாத்தா சண்முகநாதன் மற்றும் குடும்பத்தினருக்கு முதல் மாத சம்பளத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி வந்துள்ளேன் சாப்பிடுங்கள் என்று கொடுத்து உள்ளார். இதற்கிடையே மகன் ஆசையாக வாங்கி வந்த சிக்கன் ரைசை சாப்பிட்ட நதியா, சண்முகநாதன் ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மீதமுள்ளவர்கள் சிக்கன ரைஸ் சாப்பிட வில்லை.
நெல்லையில் மாயமான காங்கிரஸ் தலைவரின் உடல் எரிந்த நிலையில் மீட்பு; காங்கிரஸ் எம்எல்ஏ.வுக்கு தொடர்பு?
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நதியா, சண்முகநாதன் ஆகிய இருவரையும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், இது தொடர்பாக எந்தவித பரபரப்பும் இல்லாமல் பகவதி இருந்து வந்துள்ளார்.
முன்னதாக சிகிச்சைக்கு வந்த 2 பேரும் வாயில் நுரை தள்ளியபடி வந்ததால் அவர்களுக்கு உணவு ஒவ்வாமையால் பிரச்சினை ஏற்பட்டு இருக்க வாய்ப்பு குறைவு எனவும், சாப்பாட்டில் விஷம் கலந்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கடந்த மே 01.05.24 ம் தேதி ஓட்டலில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் உமா, சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார், இதையடுத்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர் மேலும் சிக்கன் ரைஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உமா நாமக்கல் போலீசாருக்கு உத்தரவிட்டார். அவர்களும் சிக்கன் ரைஸ் உணவு மாதிரியை எடுத்து, சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பினர். இதன் பின்னர் ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம், சிக்கன் ரைஸ் வாங்கி சென்ற பகவதி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி சண்முகநாதன் சிகிச்சை பலன்யின்றி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து உணவு மாதிரியின் பகுப்பாய்வு முடிவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தது உறுதி செய்யப்பட்டதால் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி சென்ற பகவதியிடம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது பகவதி திடீரென நான் தான் உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தேன் என ஒப்புக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதல் செய்ததில் தன்னுடைய குடும்பத்தினருக்கும், பெண்ணின் குடும்பத்தினருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
இதில் இருந்து தன்னிடம் தாய் நதியா பாசமாக இல்லை என்று தெரிவித்த பகவதி மேலும் ஒரு பெண்ணிடம் உள்ள தவறான பழக்கம், செல் போனில் அபாச படங்களை அடிக்கடி பார்த்தது குறித்து தாய், தாத்தாவும் கண்டித்ததால் அனைவரையும் விஷம் கொடுத்து கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக நாமக்கல்லில் உள்ள கடையில் கடந்த 27 ம் தேதியே கலைக்கொல்லிக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி வைத்துக்கொண்டேன். பின்னர் 30ம் தேதி வீட்டிற்கு செல்லும் வழியில் நின்று கொண்டு சிக்கன் ரைஸ் உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தேன் என்றும் இதில் இருவர் மட்டுமே சாப்பிட்டார்கள், மற்றவர்கள் சாப்பிடவில்லை என தெரிவித்தார்.
இதனையடுத்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் பகவதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த தாய் நதியாவும் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.