காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கொலைக்கு இவர்கள் தான் காரணமா? ஆதாரம் வெளியிட்ட அண்ணாமலை!

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தன்சிங்கின் உடல் திசையன்விளை அருகே தோட்ட வீட்டில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tirunelveli district congress president jayakumar Murder Case.. Annamalai shocking information tvk

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது என அண்ணாமலை கூறியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தன்சிங். இந்நிலையில் கடந்த 2ம் தேதி இரவு 7.30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெயக்குமார் 2 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மகன் காவல் நிலையத்தில் தந்தையை கண்டு பிடித்து தருமாறு புகார் மனு அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

Tirunelveli district congress president jayakumar Murder Case.. Annamalai shocking information tvk

இந்நிலையில் ஜெயக்குமார் தன்சிங்கின் உடல் திசையன்விளை அருகே தோட்ட வீட்டில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. 

Tirunelveli district congress president jayakumar Murder Case.. Annamalai shocking information tvk

கடந்த ஏப்ரல் 30 அன்றே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார் அவர்கள் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு உள்ளிட்டவர்கள் பெயர்களை, அந்தப் புகார் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது. உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios