இரண்டு மாடி.. அதிரடியாக களமிறக்கப்படும் பொம்பள பிக்பாஸ்? இது நம்ப லிஸ்டுலையே இல்ல பாஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில், அவ்வப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் குறித்து பார்க்கலாம்.
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சி 2017 ஆம் ஆண்டு துவங்கிய நிலையில், தொடர்ந்து ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்புக்கு மத்தியில், வெற்றிகரமாக 6 சீசன்களை கடந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உருவாக முக்கிய காரணம் உலக நாயகன், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது என்றும் கூறலாம்.
கடந்த ஜனவரி மாதம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், அதில் பிரபல தொலைக்காட்சி நடிகர் அசீம் மக்களின் பேராதரவோடு டைட்டிலை தட்டி சென்றார். இதை தொடர்ந்து, அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்க உள்ளது. அவ்வப்போது இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர் யுகங்களின் அடிப்படையில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
அதே போல் இந்த முறை... பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கும் வகையில் சில சர்ச்சை போட்டியாளர்களை களமிறக்க பிக்பாஸ் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான பிக்பாஸ் டீசரில் இந்த முறை ஒரு வீட்டில் அல்ல இரண்டு வீட்டில் பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்க வைக்க படுவதை கமல்ஹாசன் உறுதி செய்தார். இந்த வீடுகள் தரைத்தளம், மேல் தளம் என டிசைன் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, வெளியாகியுள்ள தகவலில்... இந்த முறை ஆண் பிக்பாஸ் குரல் மட்டும் அல்ல, பெண் பிக்பாஸ் குரலும் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒலிக்கும் என கூறப்படுகிறது. இரண்டு பிக்பாஸ் வீடு இருப்பதால் ஒரு வேலை, இரண்டு வீட்டிற்கும் இடையே வித்தியாசம் வேண்டும் என்பதால் இப்படி புது ஐடியாவை பிக்பாஸ் குழு புகுத்தியுள்ளதா? என்கிற டவுட்டை இந்த தகவல் எழுப்பியுள்ள நிலையில்... இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.