டாப் ஸ்டார் முதல்.. சாண்டா வரை.. வருட கணக்கில் ரிலீஸ் ஆகாமல் காத்திருக்கும் படங்கள் - என்ன தான் காரணம்?
Un-Released Movies of Top Actors : ஒரு திரைப்படம் உருவாகி, அது திரையரங்குகளை அடைந்து மக்களின் பார்வைக்கு வெளியாகும் வரை எதுவுமே நிச்சயம் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு திரைத்துறை கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது.
Party Movie
அந்த வகையில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு இன்றளவும் ஏதோ ஒரு காரணத்தினால் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல நடிகர்கள் ஜீவா, சத்யராஜ், ஜெயராம், ஷாம் மாற்று நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கசான்றா என்ற மாபெரும் நடிகர் பட்டாளம் நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் தான் "பார்ட்டி". இந்த படத்தினுடைய பாடல்கள் முடிவடைந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த படத்தில் இருந்து முதல் சிங்கள் பாடல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தை தயாரித்து வழங்கிய தயாரிப்பாளர் டி. சிவா அவர்கள் வழங்கிய தகவலின்படி பிஜி நாட்டில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும், அப்பொழுது இந்த படப்பிடிப்பிற்கு விதிக்கப்பட்ட மானியத்தை மாற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்ததாகவும், அதில் சிறு சிக்கல்கள் இருப்பதால் இந்த திரைப்படம் இன்றளவும் வெளியாகாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். படம் எடுத்து முடிக்கப்பட்டு சுமார் ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒருவேள விவேகம் ரீமேக்கா இருக்குமோ! பிரபாஸின் சலார் பட கதையை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்
Server Sundharam
இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கத்தில் நடிகர் நாகேஷ் நடிப்பில் வெளியான "சர்வர் சுந்தரம்" திரைப்படம் இன்றளவும் பலருக்கு பிடித்தமான திரைப்படங்களில் ஒன்று. இந்நிலையில் அந்த படத்தினுடைய தலைப்பை தழுவி உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் சந்தானத்தின் "சர்வர் சுந்தரம்". கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதன் பிறகு தயாரிப்பு நிறுவனத்துடன், இயக்குனருக்கு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக சுமார் ஐந்து முறை இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறிய நிலையில், 2023 ஆம் ஆண்டு முடியப் போகும் நிலையிலும் கூட இன்னமும் இந்த திரைப்படம் வெளியாகாமல் காத்திருக்கிறது.
Andhagan
தமிழ் சினிமாவில் விஜய், அஜித் என்ற போட்டி நிலவுவதற்கு முன்பாகவே "டாப் ஸ்டார்" என்ற அந்தஸ்தில் இருந்த நடிகர் தான் பிரசாந்த். இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து அவருடைய தந்தை தியாகராஜன் இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு உருவாக துவங்கிய திரைப்படம் தான் "அந்தகன்". பிரபல நடிகர் பிரசாந்த், மூத்த நடிகர் கார்த்தி, சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகி பாபு மற்றும் மூத்த இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்த இந்த திரைப்படம் இவ்வாண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்றளவும் இந்த திரைப்படம் வெளியாகாமல் உள்ளது, கடந்த மார்ச் 2022 ஆம் ஆண்டு கலைப்புலி எஸ் ஜானு அவர்கள் இந்த படத்திற்கான விநியோகஸ்த உரிமைகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சில நிதி நெருக்கடிகள் காரணமாக அந்தகன் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.