பிளாப்பா?.. அப்படினா என்ன? தோல்வியே சந்திக்காத தென்னகத்தின் மிகசிறந்த இயக்குனர்கள் - பட்டியல் இதோ!
Successful Directors of South : ஒரு திரைப்படம் என்பது பல கலைஞர்களின் ஒற்றுமையால் உருவாகும் ஒன்றுதான். ஆனால் அந்த அத்தனை கலைஞர்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக, திரைப்படம் என்கின்ற மாபெரும் கப்பலின் கேப்டனாக பயணிப்பது அப்படத்தின் இயக்குனர் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
Director Vetrimaaran
தமிழ் திரையுலகையை பொருத்தவரை பல்வேறு இயக்குனர்கள் மிகச்சிறந்த இயக்குனர்களாக உருவெடுத்து வருகின்றனர் அதற்கு தியாகராஜன் குமாரராஜா, லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன், அருண் பிரபு உள்ளிட்ட பலர் சாட்சியாக இருக்கின்றனர்.
Director Atlee Kumar
அதேபோல சில சர்ச்சைகளில் சிக்கினாலும் இன்றளவும் பிளாப் திரைப்படங்களை கொடுக்காமல் பயணித்து வரும் மற்றொரு இயக்குனர் தான் அட்லி. ஆர்யாவின் ராஜா ராணி, தளபதி விஜயின் தெறி, மெர்சல், பிகில் மற்றும் பாலிவுட் உலகின் பாஷாவாக வளம் வரும் ஷாருக்கானின் ஜவான் என்று அவர் இயக்கிய 5 திரைப்படங்களும் வியாபார ரீதியாக நல்ல வசூலை கண்ட திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மலையாள சினிமா துறையை பார்க்கும்போது, பாசில் ஜோசப், சமீர் தாஹிர், அஞ்சலி மேனன் மற்றும் கீது மோகன்தாஸ் போன்ற திரைப்பட இயக்குனர்களின் படத்தின் கருப்பொருள் மற்றும் மக்கள் அதை எதிர்கொண்ட விதம் ஆகிய இரண்டிலும் புரட்சிகரமான திரைப்படங்களை உருவாக்கியுள்ளனர் என்றே கூறலாம்.
Prashanth Neel
அதே போல KGF திரைப்படங்களை இயக்கியதற்காக பெரிய அளவில் அங்கீகாரம் பெற்ற பிரசாந்த் நீல் மற்றும் கருட கமனா, விருஷப வாகனம் மற்றும் காந்தாரா புகழ் ராஜ் பி. ஷெட்டி போன்ற குறிப்பிட்ட சில இயக்குனர்கள் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைத் தயாரிப்பதையும் கன்னட சினிமா துறை பார்த்திருக்கிறது. இந்த படங்கள் கன்னட திரையுலகை வலுப்படுத்துகிறது என்றாலும் அது மிகையல்ல.
SS Rajamouli
பாலிவுட் உலகிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய திரைத்துறையாக விளங்குவது தான் தெலுங்கு திரையுலகம், அங்கு சுமார் 22 ஆண்டுகளாக இயக்குனராக பயணித்து வருபவர் தான் எஸ்.எஸ்.ராஜமௌலி, நம் காலத்தின் வெற்றிகரமான திரைப்பட இயக்குனர்களில் இவரும் ஒருவர். பாக்ஸ் ஆபிஸில் மோசமாக சென்ற படத்தை அவர் இதுவரை தயாரித்ததில்லை.