Janhvi Kapoor: இந்த தீபாவளிக்கு... ஜான்வி கபூரின் ட்ரெண்டிங் பிளவுஸ் அண்ட் ஸ்டைலை கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க!
நடிகை ஜான்வி கபூரின் ட்ரெங்டிங் ஃபேஷன் பிளவுஸ் மற்றும் அவரை போலவே புடவைக்கு ஏற்றாப்போல் மேக்அப் செய்து உங்கள் குடும்பத்தினரை அசர வையுங்கள்.
தீபாவளி என்றாலே அனைவருக்கும் ஒரு கொண்டாட்டமான நாள் தான். அதிலும் சிறுவர்களுக்கு இரட்டை கொண்டாட்டம் என்று தான் சொல்லவேண்டும்.
காலையிலேயே எழுந்து, உற்சாகமாக எண்ணெய் குளியல் போட்டுவிட்டு, அம்மா செய்து வைத்துள்ள பலவகையான பலகாரங்களை சாப்பிடுவது மட்டும் இன்றி, அதனை சொந்த பந்தங்களுக்கும் கொடுத்து சந்தோஷப்படும் ஒரு நாள் தான் தீபாவளி.
அதே போல் வீட்டில் சாமி கும்பிட்டுவிட்டு, பெரியவர்களின் ஆசியுடன், அவர்கள் கைகளால் புத்தாடையை வாங்கி அணிந்து கொள்வதில் பேரானந்தம்.
மற்ற விசேஷ நாட்களுக்கு புதிய ஆடை நாம் எடுத்தாலும், தீபாவளிக்கு மட்டும் பார்த்து பார்த்து எடுப்போம். அதிலும் இளம் வயது பெண்கள் புடவை, சல்வார், பாவாடை தாவணி என லிஸ்டை ஏற்றிக்கொண்டே செல்வார்கள்.
சரிங்க விஷயத்துக்கு வருவோம். என்னதான் மாடர்ன் பெண்களாக இருந்தாலும், புடவை கட்டும் போது அவர்கள் முகம் தனி அழகில் பிரகாசிக்கும்.
பார்த்து பார்த்து... சேலை வாங்குவது ஒரு வேலை என்றால், அதற்க்கு ஏற்றாப்போல், டிசைன் தேர்வு செய்து ஜாக்கெட் தைப்பது அதை விட பெரிய வேலை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் சேலைக்கு ஏற்றாப்போல் எப்படி தங்களை அலங்கரித்து கொள்வது என்பதிலும் பலருக்கு குழப்பம் இருக்கலாம். நீங்க ஜான்வி கபூர் மாதிரி கொஞ்சம் எளிமையான ஸ்டைலில் ஜாக்கெட் மற்றும் காஸ்மெடிக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.
அதே போல் ஜான்வி அணியும் லாங் நெக் போன்ற ஜாக்கெட்டுகள் ஒளியாக இருப்பவர்களுக்கு தான் பொருந்தும். அதை கொஞ்சம் ஆல்டர் செய்து குண்டாக இருப்பவர்கள் போட்டாலும் இரத்தின பொருத்தமா இருக்கும் போங்க.
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஜான்வி போல்... பட்டு சேலைக்கு அவரின் ஸ்டைலில் உங்களை அலங்கரித்துக்கொண்டு, இந்த தீபாவளியை ஜமாய்ங்க.