குறைந்த விலையில் அதிகளவு விற்பனையாகும் டாப் 5 எலக்ட்ரிக் கார்கள் இதுதான்..!
இந்தியாவில் உள்ள டாப் 5 மிகவும் மலிவான மின்சார கார்கள் பற்றி பார்க்கலாம். எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ. 20 லட்சத்திற்கும் குறைவான விலையில் உள்ள டாப் 5 எலக்ட்ரிக் கார்களைப் பற்றி விரிவாக காணலாம்.
இந்திய சந்தையில் எலக்ட்ரிக் கார்கள் படிப்படியாக பிரபலமடைந்து வருகின்றன. இதில் ரூ. 20 லட்சத்துக்கும் குறைவான விலையில் உள்ள டாப் 5 எலக்ட்ரிக் கார்களை, எக்ஸ்-ஷோரூம் விலையில் பட்டியலிட்டுள்ளோம்.
டாடா டியாகோ EV தற்போது இந்திய சந்தையில் மிகவும் மலிவான மின்சார கார் ஆகும். இது இரண்டு வெவ்வேறு பேட்டரி பேக் உடன் வருகிறது. 19.2 kWh அலகு மற்றும் 24 kWh பதிப்பு. அவை முறையே 60 பிஎச்பி மற்றும் 74 பிஎச்பி ஆற்றலை உருவாக்குகின்றன. ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 முதல் 310 கிமீ வரை ஓட்டும் வரம்பை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இதன் விலை ரூ.8.69 லட்சம் முதல் ரூ.11.99 லட்சம் ஆகும்.
சிட்ரோயன் C3 ஹேட்ச்பேக்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு மின்சார கார். இது 29.2 kWh LFP பேட்டரி பேக்கைப் பெறுகிறது மற்றும் ஒரு சார்ஜில் 320 கிமீ வரம்பை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் காரில் 56 பிஎச்பி மற்றும் 143 என்எம் டார்க் திறனை உருவாக்குகிறது. இதன் விலை: ரூ 11.50 லட்சம் முதல் ரூ 12.13 லட்சம் வரை ஆகும்.
டாடா டிகோர் EV (Tata Tigor EV) மட்டுமே தற்போது சந்தையில் ரூ.20 லட்சத்தில் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் ஒரே எலக்ட்ரிக் செடான் ஆகும். இது 26 kWh திரவ-குளிரூட்டப்பட்ட IP67-ரேட்டட் லித்தியம்-அயன் பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. இது மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பவர்டிரெய்ன் 74 பிஎச்பி மற்றும் 170 என்எம் பீக் டார்க்கை வெளிப்படுத்தும். ஒரு சார்ஜில் 315 கிமீ ஓட்டும் வரம்பை வழங்க ஏஆர்ஏஐ-சான்றளிக்கப்பட்டுள்ளது. இதன் விலை: ரூ 12.49 லட்சம் முதல் ரூ 13.75 லட்சம் வரை ஆகும்.
டாடா நெக்ஸான் EV (Tata Nexon EV) தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மின்சார SUV ஆகும். இது இந்தியாவில் டாடா மோட்டார்ஸின் EV பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. தற்போது பிரைம் மற்றும் மேக்ஸ் பதிப்புகளில் கிடைக்கிறது. Nexon EV பிரைம் 30.2 kWh லித்தியம்-அயன் பேட்டரியைப் பெறுகிறது. அதே நேரத்தில் Nexon EV Max பெரிய 40.5 kWh யூனிட்டைப் பெறுகிறது. அவை முறையே 312 கிமீ மற்றும் 437 கிமீ வரை ஒரு சார்ஜில் ஓட்டும் வரம்பை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இதன் விலை: ரூ 14.49 லட்சம் முதல் ரூ 18.99 லட்சம் வரை ஆகும்.
மஹிந்திரா XUV400 இறுதியாக, இந்த பட்டியலில் உள்ள கடைசி எலக்ட்ரிக் கார் ஆகும். புதிய மஹிந்திரா XUV400 ஆனது EL மாறுபாட்டிற்கு 39.4 kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக்கைப் பெறுகிறது மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 456 கிமீ தூரம் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படை-ஸ்பெக் EC வகைகள் 34.5 kWh பேட்டரி பேக் மற்றும் ஒரு சார்ஜில் 375 கிமீ வரம்பை வழங்குகிறது. இதன் விலை: ரூ 15.99 லட்சம் முதல் ரூ 18.99 லட்சம் வரை ஆகும்.