- Home
- Gallery
- Today Gold Rate in Chennai : நேற்று ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்.. இன்று உயர்ந்ததா? குறைந்ததா?
Today Gold Rate in Chennai : நேற்று ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்.. இன்று உயர்ந்ததா? குறைந்ததா?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.45,840க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,730க்கு விற்பனையானது.
இன்றைய (நவம்பர் 22) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. சவரன் ரூ.45,840-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.5,730ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,200ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 49,600ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை 40 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.79.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.