Today Gold Rate in Chennai : இன்று தாறுமாறாக எகிறியதா தங்கம்? நிலவரம் என்ன? இதோ தகவல்..!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
Gold Rate
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.
Yesterday Gold Rate
நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.46,720-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.5,840-க்கு விற்பனையானது.
Today Gold Rate
இன்றைய (ஜனவரி 28) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. சவரன் ரூ.46,720-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.5,840ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,310ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.50,480-ஆக விற்பனையாகிறது.
Today Silver Rate
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.77.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.