Vegetables Price: கண்களில் கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம் விலை.. தக்காளி, இஞ்சி விலையும் புதிய உச்சம்!
சின்ன வெங்காயம் வரத்து குறைந்ததை அடுத்து விலை மீண்டும் 100 ரூபாயை நெருங்கி உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
காய்கறிகள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், தக்காளி, வெங்காயம் விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
vegetables
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25க்கும், முருங்கக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 240 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாக்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 95 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 55க்கும் விற்பனை செய்யப்படுகிறது.