MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திருமண உறவில் நெருக்கத்தை அதிகரிக்க உதவும் டிப்ஸ் இதோ.. தம்பதிகளே கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..

திருமண உறவில் நெருக்கத்தை அதிகரிக்க உதவும் டிப்ஸ் இதோ.. தம்பதிகளே கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..

திருமண உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும் ஆசை மற்றும் இணைப்பை வலுப்படுத்த உதவும் டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
Published : Mar 02 2024, 03:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Do you know about 6 second kiss theory

Do you know about 6 second kiss theory

திருமண உறவில் பொதுவாக சில சமயங்களில் உங்கள் துணையிடமிருந்து துண்டிக்கப்பட்டது போல் நீங்கள் உணரலாம். இது  இயற்கையானது தான். பெரும்பாலும், உறவின் ஆரம்ப கட்டங்களில் துணை உடன் கொண்டிருந்த நெருக்கமும், விருப்பமும் இப்போது இல்லை என்று அடிக்கடி உணரலாம். அதே போல் திருமண உறவில் சில சமயங்களில் உடலுறவை விரும்புவதும், மற்ற நேரங்களில் முற்றிலும் ஆர்வமில்லாமல் இருப்பதும் இயல்பானது.

27

ஒரு காலக்கட்டத்தில் உடலுறவு எப்படி மிகவும் முக்கியமானதாக இருக்கிறதோ அதே போல் சில நேரங்களில் முக்கியமற்றதாகவும் இருக்கலாம். திருமணமான தம்பதிகள் பலரும் இந்த பிரச்சனையை எதிர்க்கொண்டு வருகின்றனர். திருமண உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும் ஆசை மற்றும் இணைப்பை வலுப்படுத்த உதவும் டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

37

ஆரோக்கியமான உறவின் அடிப்படையான விஷயங்களில் ஒன்று ஆரோக்கியமான தொடர்பு. தம்பதிகள் ஒருவருக்கொருவர் தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படையாக பேச வேண்டும், மேலும் உங்கள் துணையிடம் இருந்து உங்களுக்கு என்ன தேவை, அதே போல் உங்களிடம் இருந்து உங்கள் துணைக்கு என்ன தேவை என்பதை ஒருவருக்கொருவர் தெரியப்படுத்த வேண்டும். இது உறவில் சிறந்த புரிதலை உருவாக்க உதவுகிறது.

47

ஒவ்வொரு உறவிலுமே ஒரு குறிப்பிட்ட அளவிலான நட்பு இருக்கும்., அது இரண்டு நபர்களை ஒன்றாக இணைக்கிறது. இருவரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் நேர்மையாக இருக்க அனுமதிக்கிறது. அந்த நட்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் இது மனக்கசப்பு மற்றும் விரக்தியை ஆரோக்கியமான முறையில் தீர்க்க உதவும்.

57

உறவுக்கும் துணைக்கும் முன்னுரிமை கொடுத்து, உங்கள் துணையுடன் ஒன்றாகச் செலவழிக்க நேரத்தைச் செலவிட முயற்சி செய்ய வேண்டும். ஒன்றாக வீட்டு வேலை செய்வது அல்லது ஒன்றாக படம் பார்ப்பது போன்றவற்றை செய்யலாம். உங்கள் துணை உடன் நல்ல நினைவுகளை உருவாக்குவது அல்லது அவர்கள் உடனான மோதல்களை நிவர்த்தி செய்வது தொடர்பை ஆழப்படுத்த உதவும்.

67

புதிய விஷயங்களை ஒன்றாக ஆராய நீங்கள் தயாராக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்வது புதிய விஷயங்களை ஆராயவும், ஆய்வில் மகிழ்ச்சியைக் காணவும் உதவும். புதிதாக ஏதேனும் கற்றுக்கொள்ள விரும்பினால் உங்கள் துணைக்கும் அதில் விருப்பம் இருந்தால் இருவரும் ஒன்றாகவே கற்றுக்கொள்ளலாம்.

77

நாம் இருக்கும் சூழல் நமது உறவுகளை பெரிதும் பாதிக்கலாம். எனவே உங்கள் சுற்றுப்புறச் சூழலையும் உன்னிப்பாகக் கவனித்து, அதில் நமக்கு எது பிடிக்கும் அல்லது எது பிடிக்காது புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பிரச்சனைகளை தடுக்க முடியும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும். 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
உறவு ஆலோசனைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved