Guru Peyarchi 2022: ஜூலை 29ம் தேதி குருவின் வக்ர பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு கூரையை பிய்த்து பண மழை பொழியும்
Guru Peyarchi 2022 Palangal: ஜோதிடத்தின் படி, ஜூலை 29 ஆம் தேதி, குரு பகவான் அல்லது வியாழன் கிரகம் அதன் சொந்த ராசியான மீனத்தில் வக்ர நிலையில் பெயர்ச்சியாகிறது. வியாழனின் இந்த ராசி மாற்றம் எந்ததெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்களை கொடுக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தனது நிலையை மாற்றிக் கொள்கிறது. இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். இது சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் இருக்கும்.
குரு பகவான் வக்ர பெயர்ச்சி:
ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தனது நிலையை மாற்றிக் கொள்கிறது என்றும், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்கள் மீதும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஜூலை 29 ஆம் தேதி, குரு பகவான் அல்லது வியாழன் கிரகம் அதன் சொந்த ராசியான மீனத்தில் வக்ர நிலையில் பெயர்ச்சியாகிறது. வியாழன் கிரகம் அறிவுத்திறன், வளர்ச்சி, செல்வம், மற்றும் நல்லொழுக்கம் போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.எனவே, வியாழனின் இந்த ராசி மாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பாக யோகம் தர உள்ளது. அப்படியாக, எந்ததெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்களை கொடுக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
guru peyarchi 2022
ரிஷபம்:
ஜோதிட சாஸ்திரப்படி வியாழன் ரிஷபம் ராசிக்கு 11-ம் வீட்டில் வக்ர நிலையில் நுழைகிறார். இது வருமானம் மற்றும் செல்வம் நிறைந்த இடமாக கருதப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் உங்களுக்கு வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. திடீர் பண வரவு உண்டாகும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். எந்தவொரு வணிக ஒப்பந்தத்தையும் முடிக்க முடியும். உங்களுக்கு தொழிலில் லாபம் உயரும். நீங்கள் புதிய தொழில் தொடங்க நினைத்தால், இந்த நேரம் சாதகமாக இருக்கும்.
guru peyarchi 2022
சிம்மம்:
வியாழன்சிம்மம் ராசிக்கு 12ம் வீட்டில் நுழைகிறார். இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு இருக்கும். தடைபட்ட வேலை நடந்து முடியும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண யோகம் கைகூடும். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலை வலுவடையும். சிம்ம ராசிக்காரர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
guru peyarchi 2022
மிதுனம்:
வியாழன் மிதுன ராசிக்கு 10 வீட்டில் வக்ர நிலையில் பெயர்ச்சியாகிறது. ஜோதிட சாஸ்திரப்படி மிதுனம் ராசியை புதன் ஆட்சி செய்கிறது.எனவே, இந்த நேரம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை, வணிகம் மற்றும் வேலைத் துறை நிறைந்த இடமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வரலாம். வேலையில் பதவி உயர்வு உண்டாகும். அதேபோன்று, புதன் மற்றும் வியாழன் இடையே நட்பு உணர்வு மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
guru peyarchi 2022
கடகம்:
இந்த ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் வியாழன் வக்ர நிலையில் பெயர்ச்சியாகிறது. இது அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாக கருதப்படுகிறது. வியாழன் பிற்போக்கு காலத்தில், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். இந்த நேரத்தில், நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். நீங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செய்யலாம்.