MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விஜய் டிவியில் TRP-க்காக நடக்கும் தில்லு முல்லு! ரஜினி மற்றும் விஜய் படங்களின் அட்ட காப்பியால இருக்கு?

விஜய் டிவியில் TRP-க்காக நடக்கும் தில்லு முல்லு! ரஜினி மற்றும் விஜய் படங்களின் அட்ட காப்பியால இருக்கு?

விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் 2 சீரியல்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய்யின் படங்களை காப்பி அடித்து எடுக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் வச்சு செய்து வருகிறார்கள். 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 23 2023, 04:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
sun tv vijay tv serials

sun tv vijay tv serials

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சில சீரியல்கள் TRP ரேட்டிங் குறைந்ததால் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டு, சில புதிய சீரியல்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் விஜய் டிவி-யில் மூன்று வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டார்' சீரியலை இனியும் ஜவ்வு மிட்டாய் போல் இழுத்து கொண்டு செல்லாமல், அதன் இரண்டாவது பாகத்தை ஒளிபரப்ப தயாராகி விட்டது சீரியல் குழு.
 

25

சமீபத்தில் தான் பாண்டியன் ஸ்டார்ஸ் சீசன் 2 சீரியலின் புதிய புரோமோவும் வெளியானது. கிட்ட தட்ட எம் டன் மகன் கான்செப்டில் இந்த சீரியல் உருவாகிறது. அப்பா வேடத்தில் ஸ்டாலின் நடிக்க, அவருக்கு ஜோடியாக நிரோஷா நடிக்கிறார். தன்னுடைய மூன்று மகன்களையும் கட்டுக்கோப்பாக வளர்க்கும் தந்தை, எப்படி கடைசி வரை தன்னுடைய மகன்களை அடக்கி ஆள்வார் என்பதே இந்த சீரியலின் கதைக்களம் என தெரிகிறது.

Ramya Pandian: நவராத்திரி ஸ்பெஷல்.. தாமரை மேல் அமர்ந்திருக்கும் துர்கா தேவியாக காட்சியளிக்கும் ரம்யா பாண்டியன்
 

35

இதை தவிர சில சீரியல்களில் TRP-யை கூட்ட சூப்பர் ஹிட் படங்களின் காட்சிகளை அட்ட காப்பி அடித்து வருகிறது விஜய் டிவி, என்கிற குற்றச்சாட்டுகளையும் முன் வைத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

45

மகாநதி சீரியலில், தளபதி விஜய் நடித்த 'பிரியமானவளே' படத்தில் வருவது போல் ஒரு வருஷம் அக்ரீமெண்ட் போட்டு காவேரியை, அஜய் திருமணம் செய்து கொள்கிறார். காவேரி தன்னுடைய தங்கை உயிரை காப்பாற்ற தான் இந்த அக்ரீமெண்ட் திருமணத்திற்கு சம்மதித்தார் என்பது தெரியாமல் ஒரு பக்கம் அவரின் குடும்பமே காவேரியை வெறுக்க துவங்கி விட்டது. 

Karthika Nair Engagement Photos: மகள் கார்த்திகாவின் நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராதா!
 

55

இதை தொடர்ந்து, தமிழும் சரஸ்வதியும் சீரியலில் 'மன்னன்' படத்தின் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. "தமிழ் வேலை விஷயமாக தன்னுடைய நண்பனுடன் பெங்களூர் செல்ல, ஏர்போர்ட் போன போது, தமிழின் நண்பன் தெரியாமல் ஒரு பெண் மீது மோத, அவரை அந்த பெண் அடிக்க வருகிறார்... உடனே கோவத்தில், தமிழ் அந்த பெண்ணை அடிக்கிறார். பின்னர் பெங்களூருவில் அவர் பார்க்க வருவதே ஏர்போர்ட்டில் அடித்த அந்த பெண்ணை தான் என்பது தெரிகிறது. இதே போன்ற சீன மன்னன் படத்திலும் இடம்பெற்றிருக்கும் எனது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
விஜய் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved