என்னோட கட்சியில் லோகேஷுக்கு இந்த பதவி தான் கொடுப்பேன் - தளபதியின் Thug Life பதில்
நீங்கள் அரசியலுக்கு வந்தால் உங்கள் கட்சியில் லோகேஷ் கனகராஜுக்கு என்ன பதவி கொடுப்பீர்கள் என்கிற கேள்விக்கு நடிகர் விஜய் அளித்த ஆச்சர்ய பதில் பற்றி பார்க்கலாம்.
Vijay, Lokesh Kanagaraj
நடிகர் விஜய்யின் மனம்கவர்ந்த இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்து இருப்பவர் லோகேஷ் கனகராஜ். லோகேஷின் கெரியர் மளமளவென உயர முக்கிய காரணமாக அமைந்த படம் விஜய்யின் மாஸ்டர் தான். அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தான் அவருக்கு விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விக்ரம், லியோ என அடுத்தடுத்து இரண்டு மாஸ் ஹிட் படத்தை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக உயர்ந்துள்ளார் லோகேஷ்.
Leo Director Lokesh
தொடர்ந்து 5 வெற்றிப்படங்களாஇ கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலையில், விரைவில் தொடங்க உள்ள லோகேஷ், அதன் ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணிகளை அடுத்த 6 மாதத்திற்குள் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தலைவர் 171 படத்தின் ஷூட்டிங்கை தொடங்க உள்ளார்.
Leo Success meet
இதனிடையே அவரின் சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹிட் படமான லியோ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நடத்த முடியாமல் போனதால், சக்சஸ் மீட்டை படக்குழு மிகவும் பிரம்மாண்டமாக நடத்தியது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் லியோ படக்குழுவினர் மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Vijay Praises Lokesh
இந்த விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றி நடிகர் விஜய் பேசுகையில், லோகேஷை நினைத்து தான் பெருமை கொள்வதாகவும், மாநகரம் மூலம் நம்மள பாக்க வச்ச அவர், கைதி மூலம் எல்லாரையும் பாக்க வச்சு, மாஸ்டர், விக்ரம் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வச்சு, இப்போ லியோவில் இன்னும் ஹாலிவுட் தான் பாக்கினு நினைக்குறேன். உன்னை நினைக்கும் போது பெருமையா இருக்கு லோகி என கூறினார்.
vijay about lokesh kanagaraj
அப்போது அங்கிருந்த தொகுப்பாளர்கள், லோகேஷ் 10 படம் பண்ணி முடிச்சத்துக்கப்புறம் சினிமாவில் இருந்து விலகி உங்க அரசியல் கட்சியில் சேர வந்தா அவருக்கு என்ன பதவி கொடுப்பீங்க என விஜய்யிடம், கர்ப்பனையா ஒரு கேள்வி கேட்டனர். இதற்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவை லோகேஷுக்கு வழங்குவேன் என விஜய் சொன்னதும் அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.
இதையும் படியுங்கள்... Super Star விவகாரம்.. "ஒரே ஒருத்தர்தான் சூப்பர் ஸ்டார்" சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்