MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நேரம் குறிச்சாச்சு.. தரமான அப்டேட் உடன் வெங்கட் பிரபு கொடுத்த ஹின்ட்

தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நேரம் குறிச்சாச்சு.. தரமான அப்டேட் உடன் வெங்கட் பிரபு கொடுத்த ஹின்ட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்து வரும் தளபதி 68 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

2 Min read
Ganesh A
Published : Dec 31 2023, 12:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thalapathy 68

Thalapathy 68

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி என்கிற இளம் நடிகை நடித்து வருகிறார். இவர் தமிழில் இதற்கு முன்னர் கொலை என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஆவார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

24
thalapathy 68 Update

thalapathy 68 Update

தளபதி 68 படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி, வைபவ், நிதின் சத்யா, சினேகா, லைலா, யோகிபாபு, ஜெயராம், மைக் மோகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்திய படக்குழு, அப்போது பிரம்மாண்ட செட் அமைத்து விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இணைந்து ஆடிய நடனக்காட்சி ஒன்றை படமாக்கி இருந்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Thalapathy 68 Title

Thalapathy 68 Title

இதையடுத்து படக்குழுவுடன் தாய்லாந்து சென்ற நடிகர் விஜய் அங்கு அதிரடி ஆக்‌ஷன் காட்சியில் நடித்தார். பின்னர் இந்தியா திரும்பிய படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்தி வந்தது. தற்போது புத்தாண்டு விடுமுறையால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தளபதி 68 திரைப்படத்தின் அப்டேட்டுகளை ரசிகர்களுக்கு அள்ளிவீசி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது படக்குழு.

44
Thalapathy 68 First look

Thalapathy 68 First look

இந்த நிலையில் தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என வெங்கட் பிரபு அறிவித்து. வழக்கமாக தன் படத்தில் வரும் டேக் லைன் 7 எழுத்தில் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இப்படத்திற்கு GOAT என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதன் டேக் லைனாக A Venkat Prabhu Mission என வைத்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... விஜயகாந்தை தொடர்ந்து ரசிகர்களை உலுக்கிய அடுத்த மரணம்... கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் காலமானார்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved