சூடுபிடிக்கும் தளபதி 68 பிசினஸ்.. படத்துக்கு பெயரே வைக்கல அதற்குள் ஓடிடி உரிமை விற்பனை! அதுவும் இத்தனை கோடியா?
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 68 திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பே அப்படத்தின் ஓடிடி உரிமை விற்பனை செய்யப்பட்டு உள்ளதாம்.
Thalapathy 68 New Update
லியோ படம் ரிலீசுக்கு தயராகி வரும் சூழலில் நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள தளபதி 68 படத்தின் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். தளபதி 68 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Vijay, Sneha
தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் விஜய், தந்தை - மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம். இதில் இளம் வயது விஜய் கதாபாத்திரத்திற்காக அண்மையில் அமெரிக்கா சென்று லுக் டெஸ்ட் நடத்தி வந்தனர். இளம் வயது விஜய் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அப்பாவாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இதையும் படியுங்கள்... Atlee Net Worth: 36 வயசு... இயக்கியது 5 படம் தான்!! அட்லீயின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Venkat Prabhu, vijay
தளபதி 68 படத்தின் அப்டேட்டுகளை லியோ படம் ரிலீஸாகும் வரை வெளியிடக்கூடாது என படக்குழு பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தாலும், தொடர்ந்து அப்படம் குறித்த தகவல்கள் எக்ஸ் தளத்தில் கசிந்த வண்ணம் உள்ளன. தற்போது லேட்டஸ்ட்டாக தளபதி 68 படத்தின் ஓடிடி மற்றும் ஆடியோ உரிமையை ரிலீசுக்கு முன்பே பிரபல நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
Thalapathy 68 OTT and Audio rights
அதன்படி தளபதி 68 படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு மேல் கொடுத்து கைப்பற்றி உள்ளதாம். அதேபோல் இப்படத்தின் ஆடியோ உரிமையை டி-சீரிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் பரவி வருகிறது. படத்துக்கு இன்னும் பெயரே வைக்காமல், ஷூட்டிங்கே தொடங்கப்படாமல் இருக்கும் நிலையிலும் தளபதி 68 திரைப்படத்தின் பிசினஸ் சூடுபிடித்துள்ளதால் படக்குழுவும் உற்சாகம் அடைந்துள்ளதாம்.
இதையும் படியுங்கள்... லியோவை ரிஜெக்ட் பண்ணிட்டு விஷால் நடிச்ச படம்! மார்க் ஆண்டனி ஒர்த்தா... ஒர்த் இல்லையா? விமர்சனம் இதோ