லியோவை ரிஜெக்ட் பண்ணிட்டு விஷால் நடிச்ச படம்! மார்க் ஆண்டனி ஒர்த்தா... ஒர்த் இல்லையா? விமர்சனம் இதோ
Mark Antony movie Twitter review : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்திருக்கும் இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், சுனில், விநாயகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார்.
டைம் டிராவலை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இதில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவருமே இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு இப்படம் இன்று தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. திரையரங்குகளில் மார்க் ஆண்டனி படத்தின் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் தங்களை விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இந்தவாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸா? முழு லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான கான்செப்ட் உடன் மாத்தி மறந்து மாறி வந்திருக்காரு ஆதிக் ரவிச்சந்திரன். விஷாலுக்கு இது தரமான கம்பேக் படமாக அமைந்துள்ளது. அவரின் ஸ்கிரீன் பிரெசன்ஸ் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. எஸ்.ஜே.சூர்யா தூக்கி சாப்பிட்டுடாரு. ஜிவி பிரகாஷின் பின்னணி இசையில் தியேட்டர் கிழிஞ்சிருச்சு. சண்டைக் காட்சிகள் அனல்பறக்குது என பதிவிட்டுள்ளார்.
குழப்பமான டைம் டிராவல் கதை சூப்பராக படமாக்கி இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். படத்தில் என்ஜாய் பண்ண நிறைய தருணங்கள் இருக்கிறது. குறிப்பாக இண்டர்வெல் மற்றும் கிளைமாக்ஸ் வெறித்தனமா இருக்கு. விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். பின்னணி இசை அருமையாக உள்ளது. பாடல்களை பொருத்தவரை பழைய ரீமிக்ஸ் பாடல்கள் மட்டுமே ரசிக்கும்படியாக உள்ளது. தியேட்டரில் பார்க்க ஒர்த்தான படம் என குறிப்பிட்டுள்ளார்.
டைம் டிராவல் கான்செப்ட்டும், எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பும் தான் படத்தோட ஹைலைட். விஷால் ஓகே ரகம் தான். இசை ஓவர் இறைச்சல். எடிட்டிங் சூப்பர். இண்டர்வெல், சில்க் சீன், மதன் - ஜாக்கி போன் உரையாடல் ஆகியவை ஒர்த்தான காட்சிகள். முதல் பாதியில் சில டல் அடிக்கும் காட்சிகள் இருந்தாலும் இரண்டாம் பாதியில் ஃபுல் ஃபன் தான் என பதிவிட்டுள்ளார்.
மார்க் ஆண்டனி - டைம் டிராவல் படம், எஸ்.ஜே.சூர்யா பிரிச்சு மேஞ்சுட்டாரு. புரட்சி தளபதிக்கு கம்பேக் படமாக அமைந்துள்ளது. ஜிவி பிரகாஷ் முரட்டு செய்கை. ஆதிக் திரும்பி வந்துட்டார். இண்டர்வெல் மற்றும் கிளைமாக்ஸ் முரட்டு செய்கை. காமெடி காட்சிகள் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. ஜாலியா என்ஜாய் பண்ணி பாக்கலாம். பிளாக்பஸ்டர் என குறிப்பிட்டுள்ளார்.
மார்க் ஆண்டனி படத்திற்கு கதாபாத்திர தேர்வு, எஸ்.ஜே.சூர்யா, திரைக்கதை, படத்தின் நீளம், இண்டர்வெல் மற்றும் கிளைமாக்ஸ் ஆகியவை பலம் சேர்த்து பாசிடிவ் ஆக அமைந்துள்ளன. அதேபோல் முதல் பாதி மெதுவாக செல்வதும், விஎப்எக்ஸ் காட்சிகளும் தான் சுமாராக உள்ளன. மற்றபடி நெகடிவ் எதுவும் இல்லை. மொத்தத்தில் மார்க் ஆண்டனி விஷால் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இருவருக்குமே கம்பேக் படமாக அமைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... ஒரு வழியா இவரை தான் 'எதிர்நீச்சல்' சீரியலில் அடுத்த ஆதி குணசேகரனாக இறக்க போகிறதாம் சன் டிவி! லேட்டஸ்ட் அப்டேட்