இவர்களை எல்லாம் ஞாபகம் இருக்கா? ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த 4 அழகான சீரியல் நடிகர்கள்..
சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த 4 நடிகர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சினிமா நடிகர்களை போலவே சீரியல் நடிகர்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். அந்த வகையில் சீரியலில் நடித்து நம் மனதில் நீங்கா இடம்பிடித்த 4 நடிகர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
shyam ganesh
ஷ்யாம் கணேஷ் :
25 ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவி ஒளிபரப்பான சக்தி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ஷ்யாம் கணேஷ். இதை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த ஷ்யான் கணேஷ்க்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது, தீனா, யூத், ஆனந்தம் போன்ற படங்களில் நடித்தார். பிரபல சின்னத்திரை நடிகையான சிந்து என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். எனினும் ஷ்யாம் கணேஷை ஒருக்கட்டத்திற்கு பிறகு எந்த சீரியலிலும் அல்லது படத்திலும் பார்க்க முடிவதில்லை. எனினும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகர்களில் ஒருவராக ஷ்யாம் கணேஷ் இருக்கிறார்.
ramji
ராம்ஜி :
கே. பாலச்சந்தரின் காசளவு மனசு என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ராம்ஜி. இவர் ரமணி Vs ரமணி என்ற காமெடி சீரியல் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்தவர். தொடர்ந்து மர்ம தேசம் சீரியலிலும் அவர் நடித்தார். நடன அமைப்பாளரான இவர் வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா, நீ பாத்துட்டு போனாலும், பாக்காம போனாலும் போன்ற பாடல்கள் மூலம் பிரபலமானார். அமர்க்களம், உன்னை நினைத்து, ஜே ஜே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவா தலையா சீரியலில் நடித்து வருகிறார்.
vijay adhiraj
1995-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் விஜய் ஆதிராஜ். தொடர்ந்து சித்தி, அண்ணாமலை, ஆனந்தம் போன்ற பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 2000களில் பிரபலமான சீரியல் நடிகராகவும் தொகுப்பாளராகவும் வலம் வந்தார். பொண்ணு வீட்டுக்காரன், ரோஜாக்கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் சமீபத்தில் வெளியான கலக தலைவன் படத்திலும் நடித்திருந்தார்.
விஷ்வா என்றால் யார் என்று தெரியாதவர்களுக்கு கூட மெட்டி ஒலி செல்வம் என்றால் தெரியும். அந்தளவு மெட்டி ஒலி செல்வம் என்று மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் விஷ்வா. மெட்டி ஒலி சீரியலுக்கு பிறகு சிறிது இடைவெளி எடுத்துக்கொண்ட விஷ்வா பின்னர் பொன்னூஞ்சல் என்ற சீரியலில் நடித்தார். ஒரு சில படங்களிலும் விஷ்வா நடித்திருப்பார். 2010-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை திருமணம் செய்து கொண்டார். தற்போது யூ டியூப் சேனல் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்.