MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஷாக் மேல ஷாக் கொடுத்த சன்ரைசர்ஸ்– அடுத்தடுத்து அதிர்ச்சி அடைந்த காவ்யா மாறன், சிரிப்பவே காணோம்!

ஷாக் மேல ஷாக் கொடுத்த சன்ரைசர்ஸ்– அடுத்தடுத்து அதிர்ச்சி அடைந்த காவ்யா மாறன், சிரிப்பவே காணோம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் குவாலிஃபையர் சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 21 2024, 10:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

அகமதாபாத் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் தகுதிச் சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஹெட் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 3 ரன்னில் வெளியேறினார். நிதிஷ் ரெட்டி 9 ரன்னிலும் ஷாபாஸ் அகமது 0 ரன்னிலும் வெளியேறினர்.

38
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

அடுத்து ராகுல் திரிபாதி மற்றும் ஹென்ரிச் கிளாசென் இருவரும் இணைந்து ஓரளவு ரன்கள் சேர்த்தனர். எனினும் கிளாசென் 32 ரன்களில் வெளியேறவே, ராகுல் திரிபாதி அரைசதம் அடித்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

48
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

சன்வீர் சிங் 0 ரன்னிலும், அப்துல் சமாத் 16 ரன்னிலும், புவனேஷ்வர் குமார் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக பேட் கம்மின்ஸ் அதிரடி காட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

58
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

பவுலிங்கைப் பொறுத்த வரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மிட்செல் ஸ்டார் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

68
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

78
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

இந்த நிலையில் இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே சன்ரைசர்ஸ் விக்கெட்டுகளை இழந்து வந்த நிலையில் அந்த அணியின் துணை உரிமையாளர் காவ்யா மாறன் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்தார். முக்கியமான இந்தப் போட்டியில் ஹைதராபாத் வீரர்கள் இப்படி மோசமாக பேட்டிங் செய்து ஆட்டமிழந்தனர்.

88
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

இதனால் அதிர்ச்சி அடைந்த காவ்யா மாறன் கடைசி வரை சிரிக்கவே இல்லை. அவரது ரியாக்‌ஷன் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக பதில் அளிக்கும் வகையில் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தோல்வி அடைந்தால் 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் விளையாடும். இந்த போட்டி சென்னையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அகமதாபாத்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மிட்செல் ஸ்டார்க்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
சுனில் நரைன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved