சோசியல் மீடியா பிரபலம்.. இளம் வயதிலேயே அன்னைக்கு நிகரான புகழ் - யார் இந்த ஜோவிகா வனிதா விஜயகுமார்?
பிரபல நடிகை வனிதா விஜயகுமார் தமிழ் திரை உலகின் மாபெரும் கலை குடும்பத்தை சேர்ந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவருடைய தந்தை, அம்மா, அண்ணன், அக்கா மற்றும் தங்கைகள் என்று பலரும் நடிப்பு துறையில் பல சாதனைகள் புரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Jovika Vanitha
அந்த வகையில் மனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா வனிதா விஜயகுமார் அவர்களும் தற்பொழுது சோசியல் மீடியாவில் பிரபலமாகி வருவது நாம் அறிந்ததே. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், பிற சோசியல் மீடியாக்களிலும் அவர் மிகவும் ஆக்டிவான ஒரு நபராக திகழ்ந்து வருகின்றார். அவர் தன அன்னையோடு இணைந்து செய்யும் செயல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார்.
Jovika Vanitha vijayakumar
மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட ஜோவிகா தனது தாய் மனிதா விஜயகுமாரின் யூடியூப் சேனல் மூலமாக அவருடன் இணைந்து களமிறங்கி அசத்தினார். அவர் தற்பொழுது ஒரு சோசியல் மீடியா இன்ஃப்ளுவென்சராக மாறியுள்ளார் என்றால் அது மிகையல்ல, 22 வயது மட்டுமே நிரம்பிய ஜோவிகா தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
Social Media Influencer Jovika
வனிதா விஜயகுமார் அவர்களுக்கும், அவருடைய முதல் கணவரான ஆகாஷ் என்பவருக்கும் பிறந்தவர் தான் ஜோவிகா வனிதா விஜயகுமார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இளம் வயதிலேயே தனது அன்னைக்கு நிகரான புகழோடு வலம் வரும் இவர், விரைவில் திரைத்துறையிலும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 வருஷமாக வேறொருவருடன் உறவு... விவாகரத்து தர மறுக்கும் கணவன்! சிக்கித் தவிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா