அவங்க யாருமே இல்லயாம்.. விஜய் ஆண்டனி பட நடிகை தான் ஹீரோயினாம்.. தளபதி 68 - ட்விட்டரில் தீயாய் பரவும் செய்தி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெறித்தனமாக உருவாகியுள்ள லியோ திரைப்பட பணிகளை முடித்துள்ள தளபதி விஜய் அவர்கள், அடுத்தபடியாக தனது 68வது பட பணிகளை விரைவில் துவங்க உள்ளார். பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
Priyanka Mohan
வெங்கட் பிரபு தான் தளபதி 68 திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியான பிறகு அந்த படம் குறித்த பல அப்டேட்டுகள் தொடர்ச்சியாக இணையத்தில் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், அதில் இளைய விஜய்க்கு நடிகை பிரியங்கா மோகன் தான் ஜோடி என்று கூறப்பட்ட நிலையில், மூத்த விஜய்க்கு முதலில் நடிகை ஜோதிகா, தேர்வாகியுள்ளார் என்று கூறப்பட்டது.
அறிமுகமான 10 ஆண்டில் 100 படங்கள்.. கமலின் வாழ்க்கை மாற உதவிய சூப்பர் ஹிட் ஹீரோ - யார் அவர் தெரியுமா?
Simran
ஆனால் அதன் பிறகு ஜோதிகா இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை அவருக்கு பதிலாக அவருடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த நடிகை சிம்ரன் தான் தளபதி 68-ல் அவருடன் இணைந்து நடிக்க வருகிறார் என்று கூறப்பட்டது. இடையில் சில நேரங்களில் நடிகை சினேகா அவர்களுடைய பெயரும் நாயகி பட்டியலில் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.
Meenakshi Chaudhary
ஆனால் தற்பொழுது ட்விட்டர் தளத்தில் வைரலாக ஒரு செய்தியை பரவி வருகிறது, அதில் விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகையாக அறிமுகமான மீனாட்சி சவுத்திரி தான் நடிகர் விஜய் அவர்களுக்கு ஜோடியாக தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. ட்விட்டர் தலத்தில், நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்டோரை அவர் அண்மையில் Follow செய்ய துவங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.