என்னது சிவாஜி கணேசன் அமெரிக்காவில் மேயராக பணியாற்றினாரா... பலரும் அறிந்திடாத நடிகர் திலகத்தின் மகத்தான சாதனை!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அமெரிக்காவில் உள்ள நயாகரா மாநகரத்தில் ஒருநாள் மேயராக பணியாற்றியது ஏன் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
sivaji Ganesan
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாது ஒரு பிரம்மாண்டம் தான் சிவாஜி கணேசன். தன்னுடைய நவரச நடிப்பால் அனைவரையும் தன்பால் ஈர்க்கும் அசாத்திய கலைஞன் என்றால் அது சிவாஜி தான். புராணக் கதைகள் முதல் புதுக்கதைகள் வரை சிவாஜி தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் மக்களின் மத்தியில் இன்றளவும் கொண்டாடப்படுகின்றன. அவரது 96-வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபலங்கள் பலரும் நடிகர் திலகத்துக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
Sivaji Ganesan with John F Kennedy
இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அமெரிக்காவில் உள்ள நயாகரா மாநகரத்தில் ஒருநாள் மேயராக பணியாற்றியது பற்றி பலரும் அறிந்திடாத சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம். 1962-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த கலாச்சர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக அப்போதிருந்த அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அழைத்திருந்தாராம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
sivaji Ganesan working as one day mayor in america
அமெரிக்க அதிபரின் அழைப்பை ஏற்று சிவாஜியும் அமெரிக்கா சென்றிருக்கிறார். இந்த விழாவுக்கு இந்தியாவின் கலைத் தூதராக வந்திருந்த சிவாஜி கணேசனை பெருமைப்படுத்தும் விதமாக அவரை நியூயார்க்கில் உள்ள நயாகரா சிட்டியின் ஒருநாள் மேயராக அறிவித்தது மட்டுமின்றி, அவரது கையில் அந்த மாநகரத்தின் தங்க சாவியையும் கொடுத்து கெளரவித்துள்ளார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி.
sivaji ganesan, mgr
இந்த ஒரு நாள் மேயர் என்கிற பெருமையை அடைந்த மற்றொரு இந்தியர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தான். அவருக்கு அடுத்தபடியாக இத்தகைய கெளரவமிக்க பதவி சிவாஜிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அங்கு ஒரு நாள் மேயராக பணியாற்றிவிட்டு அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய சிவாஜி கணேசனை வரவேற்க மக்கள் திலகம் எம்.ஜி.ஆரே விமான நிலையத்துக்கு ரசிகர் படையோடு சென்றாராம்.
இதையும் படியுங்கள்... கலைத்தாயின் தவப்புதல்வனே... சிவாஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அண்ணா என நெகிழ்ந்த இளையராஜா - வீடியோ இதோ