MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விவாகரத்து டிராமா - எல்லாமே சீட்டிங்: ரசிகர்களை ஏமாற்றும் ஹர்திக் பாண்டியா? ரோகித் குப்தா விமர்சனம்!

விவாகரத்து டிராமா - எல்லாமே சீட்டிங்: ரசிகர்களை ஏமாற்றும் ஹர்திக் பாண்டியா? ரோகித் குப்தா விமர்சனம்!

ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிச் இடையிலான விவாகரத்து செய்தியில் எந்தவித உண்மை இல்லை என்று பிரபல யூடியூபர் ரோகித் குப்தா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 29 2024, 10:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Hardik Pandya and Natasa Stankovic

Hardik Pandya and Natasa Stankovic

ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிச் இடையிலான விவாகரத்து செய்தி எல்லாம் டிராமா. அதில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரபல யூடியூபர் ரோகித் குப்தா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று 10 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்திருந்தது.

27
Hardik Pandya and Natasa Stankovic

Hardik Pandya and Natasa Stankovic

ஐபிஎல் கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து ஜூன் 1ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியின் ஒரு பேட்ஜ் நியூயார்க் சென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

37
Hardik Pandya and Natasa Stankovic

Hardik Pandya and Natasa Stankovic

இந்த நிலையில் தான் இந்த தொடரில் ரசிகர்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக இப்படியொரு விவாகரத்து நாடகத்தை நடத்தி வருகிறார் என்று பிரபல யூடியூபர் ரோகித் குப்தா கூறியுள்ளார். நடாஷா ஸ்டான்கோவிச்சால் ஹர்திக் பாண்டியா பாதிக்கப்பட்டுள்ளார் என்பது போன்றும், எனினும் மனைவியை பிரிய நேரிட்டால் ஹர்திக் பாண்டியா ஜீவனாம்சமாக 70 சதவிகித சொத்தை இழக்க நேரிடும் என்றும் செய்தி வெளியானது.

47
Hardik Pandya and Natasa Stankovic

Hardik Pandya and Natasa Stankovic

ஆரம்பத்தில் ரெடிட் என்ற கிசுகிசு எழுதும் சமூக வலைதள பக்கத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிச் தங்களது சமூக வலைதள பக்கத்தில் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற எந்த புகைப்படத்தையும் பதிவிடவில்லை. மேலும், இருவரும் தனித்தனியாக புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர்.

57
Hardik Pandya and Natasa Stankovic

Hardik Pandya and Natasa Stankovic

இதைத் தொடர்ந்து அடுத்த நாளில் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிச் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து பெற இருப்பதாகவும் தகவல் வெளியானது.

67
Natasa Stankovic

Natasa Stankovic

மூன்றாவது நாளன்று நடாஷாவை பிரிந்தால் ஹர்திக் பாண்டியா தனது சொத்தில் 70 சதவிகிததை இழக்க நேரிடும் என்றும் கூறப்பட்டது. இவற்றிற்கு எல்லாம் ஆதாரமே இல்லை. இதற்கிடையில் நடாஷா ஜிம் பயிற்சியாளருடன் வந்து காரில் ஏறி சென்ற வீடியோ வெளியானது. இதன் காரணமாக ஆண் நண்பருடன் நடாஷாவிற்கு தொடர்பு ஏற்பட்டதால் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.

77
Hardik Pandya Divorce News

Hardik Pandya Divorce News

கடைசியாக டி20 உலகக் கோப்பை தொடருக்காக ஹர்திக் பாண்டியா லண்டன் சென்று பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு பிறகு அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹர்திக் பாண்டியாவின் குழந்தை அகஸ்தியா உடன் சகோதரரான குர்ணல் பாண்டியா இருப்பது போன்ற வீடியோ வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஹர்திக் பாண்டியா
குருணல் பாண்டியா
மும்பை இந்தியன்ஸ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved