ஹாட்ரிக் ஹிட் கொடுத்தும் கண்டுகொள்ளாத விஜய்... தளபதியை விட்டு பிரிந்த கதை சொல்லி ஃபீல் பண்ணிய ஏ.ஆர்.முருகதாஸ்
விஜய் படத்தை இயக்க கமிட்டாகிவிட்டு, கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின் அப்படத்தில் இருந்து விலகியது குறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உருக்கமாக பேசி இருக்கிறார்.
AR Murugadoss, vijay
பிரவீன் காந்தி இயக்கிய ரட்சகன், எஸ்.ஜே.சூர்யாவின் குஷி போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஏ.ஆர்.முருகதாஸ், கடந்த 2001-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே மாஸான ஆக்ஷன் படத்தை கொடுத்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இதையடுத்து விஜயகாந்தை வைத்து ரமணா என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்து வியப்பில் ஆழ்த்தினார்.
vijay, Director AR Murugadoss
இதன்பின்னர் சூர்யாவுடன் கஜினி படத்தில் கூட்டணி அமைத்த ஏ.ஆர்.முருகதாஸ், அப்படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை ருசித்தார். பின்னர் சுறா என்கிற அட்டர் பிளாப் படத்தினால் துவண்டு இருந்த நடிகர் விஜய் உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்த ஏ.ஆர்.முருகதாஸ், துப்பாக்கி என்கிற தரமான படத்தை கொடுத்தார். விஜய்யின் கம்பேக் படமாக அமைந்த துப்பாக்கி பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.
Vijay AR Murugadoss film dropped
துப்பாக்கி படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யுடன் கத்தி, சர்க்கார் என அடுத்தடுத்து இரண்டு மாஸ் ஹிட் படங்களை கொடுத்து விஜய்யின் பேவரைட் இயக்குனராகவும் மாறினார். இதையடுத்து அவர் இயக்கிய தர்பார் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. உடனே விஜய் உடன் மீண்டும் கூட்டணி அமைக்க முடிவு செய்த ஏ.ஆர்.முருகதாஸ், அவருக்காக சுமார் ஓராண்டு கத்திருந்து அவரது கால்ஷீட்டை வாங்கி படம் இயக்க தயாரானார்.
இதையும் படியுங்கள்... 50 வயசுலயும் இவ்ளோ அழகா இருக்க இதுதான் காரணமா? அருண் விஜய்யின் அக்கா அனிதா சொன்ன சீக்ரெட்..
Director AR Murugadoss
ஆனால் விஜய்க்கு கதை திருப்தி அளிக்காததால் அவர் இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதியிலேயே அப்படத்தில் இருந்து வெளியேறினார் முருகதாஸ். விஜய் உடனான பிரிவு குறித்து பேட்டி ஒன்றில் சூசகமாக பேசி உள்ள முருகதாஸ், அதில் கூறியதாவது : “நான் என் படத்திற்கு ஒரு நம்பர் 1 இடத்தில் இருக்கும் பெரிய ஸ்டாரை நடிக்க வைக்க ஆசைப்படுவதை போல், அந்த ஹீரோவும் அன்றைய சூழலில் நம்பர் 1-ல் இருக்கும் இயக்குனரை தான் எதிர்பார்ப்பார்.
AR Murugadoss vijay movie
ஒருமுறை நம்மீது இருந்த நம்பிக்கை போய்விட்டால், அதை எப்படி மீண்டும் கொண்டுவர முடியும் என்றுதான் யோசிக்க வேண்டும், அதைவிட்டுவிட்டு அவருக்கு நான் என்னவெல்லாம் செய்தேன், அவர் எனக்கு இப்படி செய்துவிட்டாரே என்று நினைக்கவே கூடாது. குறிப்பாக சினிமாவில் ஈகோ பார்க்கவே கூடாது. அதேபோல் நம் வரலாற்றையும் பார்க்க கூடாது.
Ar murugadoss next with sivakarthikeyan
10 வருடங்களுக்கு முன் நாம் நல்ல படங்களை கொடுத்திருக்கலாம், ஆனால் அது முக்கியமில்லை தற்போது நல்ல படம் கொடுத்திருக்கிறோமா என்பது தான் முக்கியமானது. நான் அதையெல்லாம் இயல்பாகவே எடுத்துக்கொண்டதாக அந்த பேட்டியில் ஏ.ஆர்.முருகதாஸ் கூறி இருக்கிறார். விஜய் படத்தில் இருந்து விலகிய பின் கடந்த 3 ஆண்டுகளாக எந்த படமும் எடுக்காமல் இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Waheeda Rehman: எம்.ஜி.ஆர் - கமல்ஹாசனுடன் நடித்த நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதாசாகேப் பால்கே விருது!