MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நோ சொன்ன மிருணாள் தாக்கூர்... முருகதாஸ் படத்தில் டிரெண்டிங் ஹீரோயின் உடன் களமிறங்கும் சிவகார்த்திகேயன்

நோ சொன்ன மிருணாள் தாக்கூர்... முருகதாஸ் படத்தில் டிரெண்டிங் ஹீரோயின் உடன் களமிறங்கும் சிவகார்த்திகேயன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் எஸ்.கே.23 திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்கிற அப்டேட் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 14 2024, 08:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ar murugadoss Sivakarthikeyan

Ar murugadoss Sivakarthikeyan

அயலான் படத்தின் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அவர் நடிப்பில் தற்போது எஸ்.கே.21 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். இதில் சிவகார்த்திகேயனும் சாய் பல்லவியும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இதன் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
SK 23 movie

SK 23 movie

இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக எஸ்.கே.23 என பெயரிடப்பட்டு உள்ளது. அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்குகிறது. இதனிடையே இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற குழப்பம் நீடித்து வருகிறது. தற்போது அதுகுறித்த முக்கிய தகவல் கசிந்துள்ளது.

இதையும் படியுங்கள்... Tamannaah Not First Choice: 'பாகுபலி' படத்தில்.. தமன்னா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?

34
Rukmini Vasanth

Rukmini Vasanth

முதலில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பின்னர் சீதா ராமம் பட பிரபலம் மிருணாள் தாக்கூர் பெயர் அடிபட்டது. ஆனால் அவர்கள் இருவருமே இப்படத்தில் நடிக்கவில்லையாம். இதில் ருக்மணி வசந்த் என்கிற கன்னட நடிகை தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இவர் இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

44
SK 23 heroine Rukmini Vasanth

SK 23 heroine Rukmini Vasanth

பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவரான ருக்மிணி வசந்த், கன்னட திரையுலகில் டிரெண்டிங் ஹீரோயினாக வலம் வருகிறார். அங்கு இவர் நடிப்பில் வெளிவந்த சப்த சாகர்தாட்சே எல்லோ என்கிற திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதில் இவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. அவரை தற்போது சிவகார்த்திகேயன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகப்படுத்த உள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இதுவரை சிவகார்த்திகேயன் ஜோடியாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷ், பிரியங்கா மோகன் ஆகியோர் முன்னணி நடிகைகளாக வலம் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... இந்த பிரபலம் தான் சனம் ஷெட்டியின் காதலரா? வெளியான ரொமான்டிக் போட்டோ ஷூட்.. பட் இந்த ட்விஸ்ட் எதிர்பாக்கல பாஸ்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஏ. ஆர். முருகதாஸ்
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved