சிவாஜி முதல் கேப்டன் வரை.. தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்த 10 படங்கள் - "தலைவர்" இதிலும் மாஸ் காட்டிருக்காரு!
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொடங்கி இன்று சிவகார்த்திகேயன் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு சில நடிகர்கள் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகின்றனர். அவர்களுடைய திரைப்படங்கள் ரசிகர்களால் பெரிய அளவில் வசிக்கப்பட்டு வருகின்றது.
Kollywood Super Stars
அந்த வகையில் தமிழ் சினிமா ரசிகர்களால் காலம் கடந்து ரசிக்கப்பட்டு வரும் டாப் 10 படங்களின் பட்டியல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த பதிவில் அந்த படங்கள் குறித்து பார்க்கலாம். திரிசூலம், உலகம் சுற்றும் வாலிபன், பாட்ஷா, எங்க வீட்டு பிள்ளை, நாட்டாமை, சந்திரமுகி, படையப்பா, சூரிய வம்சம், வானத்தைப்போல மற்றும் வசந்த மாளிகை.
மேற்கூறிய இந்த 10 திரைப்படங்களும் வசூல் சாதனை என்பதை தாண்டி ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட திரைப்படங்களாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக இந்த திரைப்படங்கள் வெளியான காலகட்டத்தை தாண்டி இன்றளவும் இந்த திரைப்படங்களுக்கு அதிக மவுசு உள்ளது என்றால் அது மிகையல்ல.
Ulagam Sutrum Valiban
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் மக்கள் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் மற்றும் திரிசூலம் ஆகிய இரு திரைப்படங்களும் வெளிநாடுகளுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தப்பட்ட திரைப்படங்கள். அதேபோல அந்த காலகட்டத்தில் கோடிக்கணக்கில் வசூல் செய்து சாதனை படைத்த படமாக இவை திகழ்ந்து வருகின்றன.
Nattamai
அதேபோல நாட்டாமை மற்றும் சூரிய வம்சம் ஆகிய இரு திரைப்படங்களும் 90ஸ் கிட்ஸ்களால் பெரிய அளவில் நேசிக்கப்பட்ட திரைப்படங்களாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது. நடிகர் சரத்குமார் இந்த திரைப்படத்தில் வெகு நேர்த்தியாக நடித்திருப்பார்.
Vanathaipola
கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வானத்தைப்போல திரைப்படம் இப்பொழுது டிவியில் ஒளிபரப்பானாலும் பலர் அதை கண்டு மகிழ்வது உண்டு. சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு கேப்டன் விஜயகாந்த் நடிப்பில், விக்ரமன் இயக்கத்தில், எஸ்ஏ ராஜ்குமார் இசையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
Super Star Rajinikanth
மேலும் இந்த பத்து திரைப்படங்களில் மூன்று திரைப்படங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையில் இருக்கிறார் என்று கூறலாம். அவருடைய நடிப்பில் வெளியான பாட்ஷா, சந்திரமுகி மற்றும் படையப்பா ஆகிய மூன்று திரைப்படமும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் என்பதை நாம் அறிவோம். மூன்றும் வெவ்வேறு இயக்குனர்களால் இயக்கப்பட்டு வெவ்வேறு கதை அம்சம் கொண்ட திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.