நண்பர்களால் வந்த பழக்கம்.. அட்டகாசம் செய்த நடிகர் ரவிச்சந்திரன் - அப்போ ஜெயலலிதா என்ன செய்தார் தெரியுமா?
தமிழ் திரையுலகில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் மக்கள் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இருந்த காலகட்டத்தில் திரைத்துறையில் அறிமுகமாகி மாபெரும் வெற்றி கண்ட நடிகர் தான் ரவிச்சந்திரன்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பிறந்து அதன் பிறகு திருச்சியில் வளர்ந்து அங்கேயே தனது பட்டப் படிப்பை முடித்தவர் ரவிச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. 1964 ஆம் ஆண்டு வெளியான காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தில் அசோக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இவர் திரையுலக பிரவேசம் அடைந்தார்.
அவர் நடித்த முதல் திரைப்படமே மெகா ஹிட் திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த படம் வெளியாகி 60 ஆண்டுகள் முடியப்போகிறது என்றாலும் இன்றளவும் அந்த திரைப்படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறிய நிலையில் தொடர்ச்சியாக இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. குறிப்பாக 1967 ஆம் ஆண்டு வெளியான "அதே கண்கள்" என்ற திரைப்படம் இவரை ஒரு உச்ச நட்சத்திரமாக மாற்றியது என்றால் அது மிகையல்ல.
எத்தன தடவ பண்றீங்க... செக்ஸ் பற்றி கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு செருப்படி பதில் கொடுத்த நீலிமா ராணி
1964 ஆம் ஆண்டு துவங்கி 2011 ஆம் ஆண்டு வரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்து வந்த ரவிச்சந்திரன் குறித்த சில சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 1970களில் முடிவில் உச்ச நட்சத்திரமாக இருந்த ரவிச்சந்திரன், அவருடைய நண்பர்கள் சிலரால் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் நான்கு ஐந்து திரைப்படத்திற்கு சூட்டிங் செல்லும் ரவிச்சந்திரனுக்கு அடிக்கடி விபத்து ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் தன் உடல் வலியை குறைக்க இந்த மது அருந்தும் பழக்கம் அவருக்கு வந்துள்ளது அது நாளடைவில் அதிகமாக, திரைப்பட சூட்டிங்கிற்கு கூட அவர் சில சமயங்களில் மது அருந்திவிட்டு வருவார் என்று கூறப்படுகிறது. ரவிச்சந்திரன் அவருடைய சமகாலத்து நடிகரும், முன்னாள் தமிழக முதல்வருமான செல்வி ஜெயலலிதா அவர்களுடன் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவருடைய நடிப்பில் வெளியான நான், மூன்றெழுத்து, குமரிப்பெண், மாடி வீட்டு மாப்பிள்ளை, பணக்கார பிள்ளை உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்கள்.
இந்த சூழ்நிலையில் தான் ஜெயலலிதாவோடு நடிக்க வந்தபோது அவர் மது அருந்திவிட்டு வந்திருக்கிறார் இது குறித்து அப்போது ஒரு பத்திரிகையில்கூட ஜெயலலிதா பேசியுள்ளார். "ரவிச்சந்திரன் மிக மிக நேர்த்தியான நடிகர், பாடல், நடனம் மற்றும் ஆக்சன் என்று அவரால் ஒரு பன்முகத்தன்மை கொண்ட நடிகராக விளங்க முடிகிறது, ஆனால் அவருடைய இந்த குடிப்பழக்கம் அவரை அடுத்த கட்டத்திற்கு செல்ல விடாமல் தடுக்கிறது" என்று கூறியுள்ளார்.
இதேபோல ரவிச்சந்திரன் அவர்களிடம் நேரடியாகவும் பலமுறை ஜெயலலிதா குடிப்பழக்கத்தை விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தனது திரை வாழ்க்கையில் மிகவும் தைரியமான பெண்ணாக வளம் வந்த நடிகை ஜெயலலிதா அவர்கள் ரவிச்சந்திரன் அவர்களிடம் பல முறை அவர் குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மலேசிய பிரதமருடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு! பின்னணி என்ன? வைரலாகும் போட்டோஸ் மற்றும் வீடியோஸ்!