எத்தன தெடவ பண்றீங்க... செக்ஸ் பற்றி கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு செருப்படி பதில் கொடுத்த நீலிமா ராணி
இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது நெட்டிசன் ஒருவர் செக்ஸ் பற்றி கேட்ட கேள்விக்கு நடிகை நீலிமா ராணி பளீர் ரிப்ளை அளித்துள்ளார்.
neelima Rani
கமல்ஹாசன் தயாரித்து நடித்த தேவர்மகன் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. இதையடுத்து விரும்புகிறேன், பாண்டவர் பூமி போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், 15 வயதிலேயே ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் சின்னத்திரை பக்கம் சென்ற நீலிமா, கடந்த 2001-ம் ஆண்டு ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் சக்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
Serial Actress Neelima
இதையடுத்து கோலங்கள், அத்தி பூக்கள், தென்றல் என ஏராளமான சீரியல்களில் நடித்த நீலிமா, ஒரு கட்டத்தில் வில்லி வேடங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். சீரியலில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது சினிமா பக்கமும் தலைகாட்டி வந்த நீலிமா, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல, ராஜாதி ராஜா, குற்றம் 23, யாழ், கஜினிகாந்த், ருத்ரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் ஆனது.
இதையும் படியுங்கள்... நடிகை ஜெனிலியா மீண்டும் கர்ப்பமா? தீயாக பரவிய செய்தி.. கணவர் ரித்தேஷ் சொன்ன ‘நச்’ பதில்..
neelima isai
நடிகை நீலிமா தன்னைவிட 11 வயது மூத்தவரான இசைவாணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு 2 குழந்தைகளும் உள்ளன. சமீபகாலமாக சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்ட நடிகை நீலிமா, பிசினஸில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். அண்மையில் கூட சென்னையில் அழகு சாதன நிலையம் ஒன்றை புதிதாக தொடங்கினார் நடிகை நீலிமா. பாடகர் எஸ்.பி.பி. சரண் தான் அந்த அழகு நிலையத்தை தொடங்கி வைத்தார்.
neelima Insta post
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நடிகை நீலிமா, அண்மையில் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினார். அப்போது நெட்டிசன் ஒருவர் நீலிமாவிடம், செக்ஸ்ல உங்களுக்கு என்ன பொசிஷன் பிடிக்கும்? ஒரு மாதத்திற்கு எத்தனை முறை பண்றீங்க என மிகவும் கொச்சையான கேள்வியை கேட்டிருந்தார். இதைப்பார்த்து கடுப்பான நடிகை நீலிமா, இந்த அறிவு கெட்டவனுக்கு என்ன பதில் சொல்வது என பதிவிட்டு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இதையும் படியுங்கள்... மலேசிய பிரதமருடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு! பின்னணி என்ன? வைரலாகும் போட்டோஸ் மற்றும் வீடியோஸ்!