MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கே.ஜே.யேசுதாஸ் பிறந்தநாள்.. 84 வயதிலும் இசை ராஜ்ஜியம் நடத்தும் கான கந்தர்வனின் இனிமையான இசை பயணம் - ஓர் பார்வை

கே.ஜே.யேசுதாஸ் பிறந்தநாள்.. 84 வயதிலும் இசை ராஜ்ஜியம் நடத்தும் கான கந்தர்வனின் இனிமையான இசை பயணம் - ஓர் பார்வை

இசை உலகில் தன்னுடையை இனிமையான குரலால் ஆளுமை செய்து வரும் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் இன்று தனது 84-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

2 Min read
Ganesh A
Published : Jan 10 2024, 01:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Yesudas

Yesudas

கேரளாவில் உள்ள போர்ட் கொச்சியில் லத்தின் கத்தோலிக்க கிறிஸ்த்துவ குடும்பத்தை சேர்ந்த அகஸ்டின் ஜோசப் - எலிசபெத் ஜோடிக்கு மகனாக பிறந்தவர் தான் கே.ஜே.யேசுதாஸ். அவரது தந்தையும் இசைக்கலைஞர் என்பதால் துவக்கத்தில் தந்தையிடமே இசை பயின்ற யேசுதாஸ், பின்னர் திருப்புனித்துறையில் இருந்த இசை அகாடமியில் தன் இசைக் கல்வியை தொடர்ந்தார். இவர் இந்துஸ்தானி இசையையும் நன்கு கற்று பின்னணி பாடகரானார்.

25
Singer KJ Yesudas

Singer KJ Yesudas

கே.ஜே.யேசுதாஸ் 1960 களில் பின்னணி பாடகராக அறிமுகமானார். 1962ல் வெளிவந்த கால்பாடுகல் என்கிற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான யேசுதாஸ், தமிழில் எஸ்.பாலச்சந்தர் இயக்கிய பொம்மை என்கிற திரைப்படத்தில் முதன்முதலில் பாடினார். அப்படத்தில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்கிற பாடல் தான் தமிழில் அவர் பாடிய முதல் பாடலாகும். ஆனால் அவருக்கு முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது.

இதையும் படியுங்கள்... கார்த்திகை தீபம் சீரியல் : நீ செஞ்சது நம்பிக்கை துரோகம்... பல்லவியை வெறுக்கும் கார்த்தி; அதிர்ச்சியில் தீபா!

35
Yesudas Birthday

Yesudas Birthday

2006-ம் ஆண்டு நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்பட பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார் யேசுதாஸ். இவருக்கு பிரபா என்கிற மனைவியும், வினோத், விஜய், விஷால் என்கிற மகன்களும் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் விஜய் யேசுதாஸ் தன் தந்தையை போலவே சினிமாவில் பின்னணி பாடகராக வலம் வருகிறார்.

45
Yesudas Awards

Yesudas Awards

இவர் தனது 50 வருட திரை வாழ்க்கையில், மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி, அரேபிய மொழி, லத்தின், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்பாடல்களை பாடி உள்ளார். சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை 8 முறை வென்று வரலாறு படைத்துள்ளார். இதுவரை இந்த சாதனையை வேறு எந்த பாடகரும் படைத்ததில்லை.

55
Yesudas 84th Birthday

Yesudas 84th Birthday

மாநில அளவில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகளிடம் இருந்து மொத்தம் 45 முறை சிறந்த பாடகருக்கான விருதை பெற்று இருக்கிறார் யேசுதாஸ். இவர் மலையாள திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். இவரை கான கந்தர்வன் என்று இவரது ரசிகர்கள் அழைக்கின்றனர். அவர் இன்று தனது 84-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்... கடலோரத்தில் ஒரு காஸ்ட்லி பங்களா.. ரூ.100 கோடி செலவில் ஷில்பா ஷெட்டி கட்டிய பிரம்மாண்ட வீட்டில் இத்தனை வசதிகளா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved