MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Simbu : மன்மதன் Meets மஞ்சும்மல் பாய்ஸ்... படம் பார்த்து மெர்சலாகி படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய சிம்பு

Simbu : மன்மதன் Meets மஞ்சும்மல் பாய்ஸ்... படம் பார்த்து மெர்சலாகி படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய சிம்பு

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்து சிலாகித்துப்போன நடிகர் சிம்பு அப்படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 24 2024, 08:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். சிதம்பரம் இயக்கிய இப்படம் கடந்த 2008-ம் ஆண்டு குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இதனால் கேரளாவைக் காட்டிலும் இப்படத்திற்கு தமிழகத்தில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட தமிழ் படங்களை தூக்கிசாப்பிடும் அளவுக்கு மஞ்சும்மல் பாய்ஸை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிவிட்டனர் தமிழ் மக்கள்.

24

கடந்த ஒரு மாதமாக திரும்பிய பக்கமெல்லாம் மஞ்சும்மல் பாய்ஸ் படம் தான் என சொல்லும் அளவுக்கு கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளை ஆக்கிரமித்து இருந்தது இப்படம். குறிப்பாக தமிழ்நாட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படம் வெறும் 20 கோடி மட்டுமே வசூலித்திருந்த நிலையில், அதையெல்லாம் மிஞ்சும் வகையில் தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது மஞ்சும்மல் பாய்ஸ்.

இதையும் படியுங்கள்... விரைவில் கல்யாணம்.. அதற்கு முன் நடந்த நிச்சயதார்த்த விருந்து - மகனோடு வந்து காதலரை கரம்பிடித்த Amy Jackson!

34

இப்படம் உலகளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து, அந்த மைல்கல்லை எட்டிய முதல் மலையாள படம் என்கிற சாதனையையும் தன்வசம் ஆக்கி உள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை தமிழ் சினிமா பிரபலங்களும் கொண்டாட தவறவில்லை. இப்படத்தை பார்த்த நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ், சீயான் விக்ரம், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினர். அந்த லிஸ்ட்டில் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக இணைந்துள்ளார் சிம்பு.

44

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை அண்மையில் பார்த்து மெர்சலான நடிகர் சிம்பு, அப்படத்தின் இயக்குனர் சிதம்பரம் மற்றும் டெக்னிக்கல் டீமை நேரில் அழைத்து பாராட்டியதோடு, படம் குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடி இருக்கிறார். எஸ்.டி.ஆர்.48 பட லுக்கில் இருக்கும் சிம்பு, மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... குழந்தை பேசுற வார்த்தையா இது? வசனங்களை காதுகொடுத்து கேட்க முடியல.. இயக்குனரை வெளுத்து வாங்கிய பத்திரிகையாளர்கள

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிலம்பரசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved