Shruti Haasan: பட்டு புடவையில்... காதலனுக்கு முத்தம் கொடுத்து ரொமான்டிக்காக தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்!
நடிகையும் உலகநாயகன் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதி ஹாசன், தன்னுடைய காதலன் சாந்தனுவுடன் மிகவும் நெருக்கமாக, இந்த தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாகவும் மாறியவர் ஸ்ருதி ஹாசன். இசை மீது அதிக ஆவர்வம் கொண்ட இவர், நடிகை என்கிற பாதையை தேர்வு செய்யாமல் இசை துறையில் பயணிக்க துவங்கினார். ஆனால் இவரின் அழகும், திறமையும் ஹீரோயின் வாய்ப்பை பெற்று தந்தது.
ஏற்கனவே ஹிந்தி மற்றும் தெலுங்கில் ஹீரோயினாக நடிக்க துவங்கி வட்ட ஸ்ருதி, இதை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான '7-ஆம் அறிவு' படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதைதொடந்து தமிழை விட, தெலுங்கில் அதிக கவனம் செலுத்தினார்.
குறிப்பாக தமிழில், தனுஷ், விஜய், அஜித், விஜய் சேதுபதி, போன்ற பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார் ஸ்ருதி ஹாசன். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவுக்கு சில படங்கள் வெற்றிபெறாததால் மீண்டும் இசைப்பணிக்கே திரும்பினார். ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தமிழில் லாபம் படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய நஷ்டமடைந்தது.
தற்போது தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள சலார் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. அதே போல் நானி - மிருணாள் தாகூர் நடித்துள்ள ஹாய் நானா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தவிர ஆங்கிலத்தில் 'தி ஐ' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.தமிழில் கைவசம் எந்த படமும் இல்லை என்றாலும், ரசிகர்களை கவரும் விதத்தில், விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த ஆண்டு தீபாவளியை தன்னுடைய காதலர் சாந்தனுவுடன் பட்டு புடவை கட்டி, படு ஜோராக கொண்டாடியுள்ளார். சந்தனுவும் பட்டு வேஷ்டி சட்டையில் உள்ளார். ஸ்ருதி ஹாசன் சாந்தனுவை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து படு நெருக்கமாக தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.