கிழிந்து போன Pant.. ஆனா இதான் சார் ட்ரெண்டு.. அணுகுண்டோடு அசால்ட்டாக விளையாடும் திவ்யா கணேசன் - Viral Pics!
Actress Divya Ganesan : தமிழ் கலை உலகை பொறுத்தவரை வெள்ளி திரையில் ஜொலிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இருக்கும் அதே வரவேற்பு சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் இருக்கிறது என்று கூறினால் அது மிகையல்ல.
Actress Divya
அந்த வகையில் மக்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்துள்ள சின்னத்திரை நடிகை தான் திவ்யா கணேசன். ஆரம்ப காலத்தில் பிரபல சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பான "கேளடி கண்மணி" என்கின்ற நாடகம் மூலம் தான் கலைத்துறையில் களமிறங்கினார் திவ்யா கணேசன். ஆனால் அந்த நாடகம் இவருக்கு பெரிய அளவில் பெயரை பெற்று தரவில்லை.
Serial Actress Divya
சன் டிவியை தொடர்ந்து ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு மற்றும் சுமங்கலி போன்ற சீரியல்களிலும் தொடர்ச்சியாக நடிக்க துவங்கிய திவ்யா கணேசன், மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார். ஆனால் அதிலும் அவருக்கு பெரிய அளவிலான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
Serial Actress Divya Ganesan
இறுதியாக விஜய் டிவியில் ஒரு நாடகத்தில் வில்லியாக நடிக்க துவங்கிய இவர் அதிலிருந்து திடீரென விலகி பாக்கியலட்சுமி சீரியலில் இணைந்தார். பாக்கியலட்சுமி சீரியல் மூலம் திவ்யா கணேசனுக்கு ஒரு மாபெரும் வரவேற்பு கிடைத்தது என்று கூறினால் அது மிகையல்ல.
Divya Ganesan
இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக உருவெடுத்திருக்கிறார் திவ்யா கணேசன். அவர் தீபாவளி திருநாளன்று சூப்பர் ஆடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.