MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கொல்கத்தா அணிக்கு டிராபி வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கொல்கத்தா அணிக்கு டிராபி வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நடப்பு ஆண்டின் கணக்கெடுப்பின்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் சொத்து மதிப்பு ரூ.50 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 27 2024, 03:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Shreyas Iyer BCCI Contract

Shreyas Iyer BCCI Contract

கடந்த 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி மும்பையில் பிறந்தவர் ஷ்ரேயாஸ் ஐயர். தனது பேட்டிங் திறமை மற்றும் தலைமைத்துவ பண்புகளுக்கு பெயர் பெற்றவர். நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் ஒரு கேப்டனாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு டிராபியை வென்று கொடுத்துள்ளார்.

211
Shreyas Iyer IPL Salary

Shreyas Iyer IPL Salary

மும்பையில் பிறந்து வளர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர், சிறு வயது முதல் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தனது மகனின் ஆர்வத்தை உணர்ந்த ஷ்ரேயாஸ் ஐயரின் தந்தை சந்தோஷ் ஐயர், அவருக்கு 11 வயதாக இருந்த போது சிவாஜி பார்க் ஜிம்கானாவில் அவரை சேர்த்தார். அவரது பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவின் வழிகாட்டுதலின்படி ஷ்ரேயாஸ் ஐயர் தனது திறமைகளை மெருகேற்றினார்.

311
Kolkata Knight Riders Net Worth

Kolkata Knight Riders Net Worth

இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடினார். இதன் மூலமாக ரஞ்சி டிராபியில் விளையாடவும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2015-16 ஆம் ஆண்டுகளில் மும்பை அணிக்காக விளையாடி 1321 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக மும்பை அணி ரஞ்சி டைட்டில் வென்றது.

411
Shreyas Iyer Net Worth

Shreyas Iyer Net Worth

இதையடுத்து இந்திய அணியிலும் இடம் கிடைத்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி நியூசிலாந்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியின் மூலமாக டி20 தொடரில் அறிமுகமானார். இதே போன்று, டிசம்பர் 10ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் மூலமாக ஒருநாள் தொடரில் அறிமுகமானார்.

511
Shreyas Iyer Net Worth

Shreyas Iyer Net Worth

கடைசியாக 2021ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம் பெற்று விளையாடி 530 ரன்கள் எடுத்தார்.

611
IPL Final 2024

IPL Final 2024

இந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்த்தால் ரூ.50 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக ஸ்போர்ட்ஸ்கீதாவில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

711
IPL 2024

IPL 2024

பிசிசிஐ ஒப்பந்தம் இல்லை:

இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ஷ்ரேயாஸ் ஐயர், கடந்த பிப்ரவரி மாதம் பி கிரேடு ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், அதற்கு முன்னதாக 2022-23 ஆம் ஆண்டுகளில் பி கிரேடு மூலமாக வருடத்திற்கு ரூ.3 கோடி வரையில் வருமானம் பெற்று வந்தார்.

811
Shreyas Iyer Investments

Shreyas Iyer Investments

ஐபிஎல் வருமானம்:

கடந்த 2015 ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ.2.6 கோடிக்கு ஏலம் எடுத்தது. அடுத்த ஓரிரு வருடங்களில் ரூ.7 கோடிக்கு விளையாடி வந்தார். இதைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது ரூ.12.25 கோடிக்கு ஷ்ரேயாஸ் ஐயரை ஏலம் எடுத்தது. நடப்பு ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக இடம் பெற்று விளையாடி வந்தார். ஐபிஎல் மூலமாக தற்போது வரையில் ரூ.72.55 கோடி வருமானம் பெற்றிருக்கிறார்.

911
Shreyas Iyer Properties

Shreyas Iyer Properties

பிராண்ட் ஒப்பந்தம்:

பல நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார். மேலும், போட், மான்யவார் மற்றும் டிரீம் 11 ஆகிய நிறுவனங்களுக்கு பிராண்ட் ஒப்பந்தம் பெற்றுள்ளார். அதோடு ரியல் எஸ்டேட் நிறுவனங்களிலும் முதலீடு செய்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

1011
Shreyas Iyer Car Collections

Shreyas Iyer Car Collections

ஆடம்பரமான சொகுசு பங்களா:

மும்பையில் பிறந்து வளர்ந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு மும்பையில் லோதா வேர்ல்டு டவரில் ரூ.11.85 கோடிக்கு ஆடம்பரமான சொகுசு பங்களா ஒன்று உள்ளது.

1111
Shreyas Iyer

Shreyas Iyer

கார் கலெக்‌ஷன்:

பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் கார் மற்றும் பைக் பிரியர்களாக இருப்பார்கள். அவர்களின் ஒருவர் தான் ஷ்ரேயாஸ் ஐயர். இவரிடம், ரூ.2.25 கோடி மதிப்பில் மெர்சிடஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி, லம்போர்கினி ஹூராகன் மற்றும் ஆடி எஸ்5 ஆகிய கார்களையும் வைத்திருக்கிறார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved