MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • குழந்தைக்கு அன்ன பிரச்சன்னம் நிகழ்ச்சி நடத்திய பிரபல சீரியல் நடிகை.. க்யூட் போட்டோஸ்..

குழந்தைக்கு அன்ன பிரச்சன்னம் நிகழ்ச்சி நடத்திய பிரபல சீரியல் நடிகை.. க்யூட் போட்டோஸ்..

சீரியல் நடிகை நட்சத்திரா - விஸ்வா தம்பதி தங்கள் மகளுக்கு முதன்முறையாக உணவு ஊட்டும் நிகழ்ச்சியான அன்ன பிரச்சன்னம் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.

1 Min read
Author : Ramya s
Published : Jan 24 2024, 12:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நட்சத்திரா தமிழில் ‘ கிடாரி பூசாரி மகுடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். எனினும் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் பட வாய்ப்புகளும் பெரிதாக அமையவில்லை.

27

ஆனால் சின்னத்திரையில் யாரடி நீ மோகினி சீரியலில் அறிமுகமான நட்சத்திரா மிகவும் பிரபலமானர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இவருக்கு சீரியல்களில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.

37

தொடர்ந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனிடையே கடந்த ஆண்டு ஜூலை மாதம் டாட்டூ ஆர்டிஸ்ட் விஸ்வா சாம் என்பவரை திடீர் திருமணம் செய்து கொண்டார் நட்சத்திரா.

47

எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி நடந்த இந்த திடீர் திருமணம் ரசிகர்கள் மத்தியிலும் சின்னத்திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

57

இதனிடையே தான் கர்ப்பமான செய்தியை அறிவித்த நட்சத்திரா கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தார். சமீபத்தில் நட்சத்திரா – விஸ்வா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்கள் மகளுக்கு இதழ் என்று பெயரிட்டுள்ளனர்.

67

எனினும் தனது தாத்தாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவசரமாக திருமணம் செய்ய வேண்டி இருந்தது என்றும் இதனால் யாரையும் திருமணத்திற்கு அழைக்க முடியவில்லை எனவும் நட்சத்திரா விளக்கம் அளித்திருந்தார்.

77

இந்த நிலையில் இந்த தம்பதி தங்கள் மகளுக்கு முதன்முறையாக உணவு ஊட்டும் நிகழ்ச்சியான அன்ன பிரச்சன்னம் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved